உதிரிப்பூக்கள் பட நடிகை அஸ்வினியா இது..! இப்போ என்ன பன்றாங்க தெரியுமா..?

0
5217
Uthiripookal

சின்னப் பிள்ளையா இருக்கும்போதிலிருந்தே எனக்கு மேத்ஸ் மீது பயங்கர லவ். மெட்ரிகுலேஷன் மேத்ஸ் மட்டுமே தெரிஞ்சிருந்த நான், மகளுக்காக ஐ.சி.எஸ்.ஈ., சி.பி.எஸ்.சி. மேத்ஸ் கத்துக்கிட்டேன். அதுதான் இப்போ யூடியூப் சேனல் நடத்தும் அளவுக்கு வந்திருக்கு”
இயக்குநர் மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்’ படத்தின் நாயகியான அஸ்வினியை யாராலும் மறக்கமுடியாது.

aswini actress

- Advertisement -

படம் வெளிவந்து 39 வருடங்களாகியும் `அழகியக் கண்ணே…’ பாடலைக் கடக்கும்போதெல்லாம் அஸ்வினியின் அமைதி ததும்பும் முகம் நினைவுகளில் மேலெழும்பும். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அஸ்வினி, திருமணம், குழந்தை என பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார். இயக்குநர் மகேந்திரன் தன்னுடைய பட ஷூட்டிங்குக்காக பெங்களூரு சென்றபோது, அஸ்வினி தன் குருநாதரைச் சந்தித்துள்ளார். அந்த உணர்வுபூர்வமான தருணத்தைப் பகிர்கிறார், `அழகிய கண்ணே…’ லஷ்மி.

ஃபேமிலியையும் மகளையும் கவனிச்சுக்கிறதுக்காக சினிமாவைவிட்டு விலகினேன். இப்போ மகளுக்கும் கல்யாணமாகி, ஒன்றரை வயசுல பேரன் இருக்கான். கணவர் சமீபத்தில்தான் தவறினார். அவரின் நினைவுகளிலிருந்து என் மனதை மீட்டெடுக்கிறது பேரனும் என்னுடைய `ஈஸி ஈஸி மேத்ஸ்’ யூடியூப் சேனலும்தான்.

-விளம்பரம்-

uthiri pookal

சமீபத்தில்தான் இந்த சேனலை ஆரம்பிச்சேன். ஐ.சி.எஸ்.ஈ., சி.பி.எஸ்.சி-யில் 7-வது மற்றும் 8-வது படிக்கும் பிள்ளைகளுக்கான மேத்ஸ் வீடியோஸ் மட்டும்தான் இதுவரைக்கும் அப்லோடு பண்ணிக்கிட்டிருக்கேன். 10-வது படிக்கும் பிள்ளைகள் வரைக்கும் செய்யணும்கிறதுதான் என் ஆசை” என்கிற அஸ்வினி, கணிதப் பாடம் மீதான தன் காதலைப் பரவசத்துடன் பகிர்கிறார்.

aswini

சின்னப் பிள்ளையா இருக்கும்போதிலிருந்தே எனக்கு மேத்ஸ் மீது பயங்கர லவ்னுதான் சொல்லணும். டீச்சரா ஆகணும்னு ஆசைப்பட்டு, நடிகையாகிட்டேன். 50 வருஷத்துக்கு முன்னாடி நான் படிச்சது மெட்ரிகுலேஷன் ஸ்கூலில்தான். காலேஜிலும் கெமிஸ்ட்ரி. பட், மேத்ஸ் அதில் ஒரு பாடமா இருந்துச்சு. மெட்ரிகுலேஷன் மேத்ஸ் மட்டுமே தெரிஞ்சிருந்த நான், மகளுக்காக ஐ.சி.எஸ்.ஈ., சி.பி.எஸ்.சி. மேத்ஸ் கத்துக்கிட்டேன். அதுதான் இப்போ யூடியூப் சேனல் நடத்தும் அளவுக்கு வந்திருக்கு. லிங்க் அனுப்பறேன். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என மென்மையாகச் சிரிக்கிறார் டீச்சர் அஸ்வினி.

Advertisement