சினிமாவை விட்டு போன ஸ்ரீகாந்த் பட நடிகைக்கு பிறந்த இரண்டாவது குழந்தை.

0
5827
Srikanth
- Advertisement -

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சம்விருதா சுனில். இவர் 2004ஆம் ஆண்டு லால் ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்த ரசிகன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பின் இவர் முப்பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் மலையாளத் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த உயிர் என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

நடிகை சம்விருதா சுனில் அவர்கள் அகில் ஜெயராஜ் என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் அமெரிக்காவில் பொறியாளராக உள்ளார். திருமணத்துக்குப் பின் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர் அமெரிக்காவில் செட்டிலானார்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அகஸ்த்யா என பெயர் வைத்தனர். இந்நிலையில் 5 வருடங்கள் இவர்களுக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. அது பெண் குழந்தையாக பிறந்துள்ளது. மேலும், சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர் கொண்டாடுவது வழக்கம். அதே போல மலையாளத்தில் சித்திரை விஷு என கொண்டாடுவார்கள்.

View this post on Instagram

Us 8 years back! ?

A post shared by Samvritha Akhil (@samvrithaakhil) on

சில தினங்களுக்கு முன்பு தான் தமிழ் புத்தாண்டு முடிந்தது. நாடு முழுவதும் கொரோனாவால் தத்தளித்து கொண்டு இருக்கும் நிலையில் யாராலும் தமிழ் புத்தாண்டை கொண்டாட மீடியவில்லை. பல பிரபலங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்கள். இந்நிலையில் நடிகை சம்விர்தா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அதில் நடிகை சம்விருதா சுனில் அவர்கள் தன்னுடைய இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை தமிழ் புத்தாண்டு (விஷு) தினத்தன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய ஒரு கையில் முதல் குழந்தை, மறு கையில் இரண்டாவது குழந்தை இருக்கும் படம். புகைப்படத்தை பதிவிட்டு அதில் அவர் கூறி இருப்பது, என்னால் எந்த விஷயத்திலும் நேரம் ஒதுக்க முடியவில்லை. காரணம் என் இரண்டு கைகளும் நிரம்பி உள்ளது. அதாவது என் இரண்டு கைகளிலும் என்னுடைய குழந்தைகள் உள்ளார்கள்.

என்னுடைய முழுநேர வேலையே அவர்களை கவனித்துக் கொள்வது தான். இந்த ஊரடங்கு சமயத்தில் அவர்களுடன் நேரத்தை ஒதுக்குவது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கடவுளை வேண்டும் சீக்கிரம் இந்த பிரச்சனை கூடிய விரைவில் முடியும் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை சம்விருதாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13387 ஆகவும், 437 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

Advertisement