வெளிநாட்டில் திரையிடப்பட்ட ‘உழைப்பாளர் தினம்’ சிறப்பு காட்சி, ஆனந்தக் கண்ணீரில் தொழிலாளர்கள் – அப்படி என்ன படம் அது?

0
429
- Advertisement -

‘உழைப்பாளர் தினம்’ படம் கடந்த வாரம் சிங்கப்பூரில், திரையிடப்பட்டு செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கி நடித்த படத்தில் குஷி நாயர், சிங்கப்பூர் துரைராஜ், சம்பத்குமார், கார்த்திக் சிவன் உள்ளிட்ட நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு மசூத் ஹம்சா இசையமைத்துள்ளார். இப்படத்தை சந்தோஷ் நம்பிராஜன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும் இப்படம், சிங்கப்பூரில் கட்டிடத் தொழில் செய்யும் வேலு என்னும் கதாபாத்திரத்தை சார்ந்தது. அவர் தனது தம்பி மட்டும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். வேலு தனது சொந்த ஊரில் கடை மற்றும் பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசைபடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் விடுமுறைக்கு வந்த வேலு மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் திரும்புகிறார். அதற்குப் பிறகு வேலு சிங்கப்பூரில் எப்படி கஷ்டப்படுகிறார்? அவருடைய சொந்த ஊரில் பிசினஸ் கனவு நிறைவேறுமா என்பது பற்றிய கதை.

- Advertisement -

சிறப்பு காட்சி:

இந்நிலையில் சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் ‘உழைப்பாளர் தினம்’ சிறப்புக் காட்சியை திரையிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டு இப்படத்தை கண்டனர். முதல் பாதியில் காமெடி, காதல் என்று பரபரப்புடன் சென்றது. இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் சொன்ன கதை கிளைமாக்ஸ் இல் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் நிறைவடைந்தது.

பாராட்டுக்களை பெற்றது:

இப்படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். அதில் உச்ச பட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர், நடிகரும் இணை தயாரிப்பாளருமான சிங்கப்பூர் துரைராஜ் அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு, ‘ எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது. ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக காட்சியாக்கி அதனை கமர்சியலுடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது ‘உழைப்பாளர் தினம்’ படம் என்று ஆனந்த கண்ணீரோடு பாராட்டினார்.

-விளம்பரம்-

அமெரிக்கா மற்றும் துபாயில் சிறப்புக்காட்சி:

மேலும் மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர், ‘ என்றாவது ஒரு நாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன். அதற்கு ‘உழைப்பாளர் தினம்’ படம் தான் எனக்கு உத்வேகம் என்று கூறினார். படம் திரைக்கு வரும் போது மீண்டும் பார்க்க அங்கு அனைவரும் ஆவலாக இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சிகள் திரையிடப் படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் குறித்து:

நடிகர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் சென்ற வருடம் வெளியான ‘வட்டார வழக்கு’ படத்தில் ஆக்ஷனில் மிரட்டி இருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கி நடித்துள்ள ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ‘உழைப்பாளர் தினம்’ படத்தை கொண்டாடுவார்கள் என்று இயக்குனர் மற்றும் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் கூறியுள்ளார்.

Advertisement