உழைப்பாளி பட வெற்றிக்கு தயாரிப்பாளர் ரஜினிக்கு கொடுத்த விலையுயர்ந்த பரிசு. என்ன தெரியுமா ?

0
3137
rajini

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். காலங்கள் கடந்தாலும் இவருடைய நடிப்பிற்கும், ஸ்டைலுக்கும் எவரும் நிகரில்லை. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இவருடைய நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் பட்டையை கிளப்பியது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் பல படங்கள் முக்கிய படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க அமைந்த படங்களில் உழைப்பாளி படமும் ஒன்று.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் தான் உழைப்பாளி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்களில் ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் உழைப்பாளி படத்தின் பூஜை போது தலைவர் ரஜினிகாந்த்க்கு உழைப்பாளி படத்தின் தயாரிப்பாளர் திரு நாகிரெட்டி அவர்கள் 101 சவரன் தங்க காசுகளை கொடுத்துள்ளார். இது சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்களை மதிக்கும் உன்னத கலைஞனான உங்களுக்கு நான் தரும் அன்பு பரிசு என்றும் கூறியுள்ளார். இது 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வு. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement