விஜய் தந்தை இயக்கத்தில் ஹீரோவாக நடித்தும் கிடைக்காத புகழ் – சன் டிவி சீரியல் பெற்றுத்தந்துள்ளது.

0
3223
vanathai
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் வானத்தைப்போல சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் சின்னராசு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார். தற்போது இவரை பற்றி பல சுவாரசியமான விஷயங்களை வாங்க பார்க்கலாம். வெள்ளித்திரையில் பல முறை முயற்சி செய்து வெற்றி கிடைக்காத நிலையில் பலரும் சின்னத்திரை நோக்கிப் பயணம் செய்வார்கள். எத்தனையோ திறமை வாய்ந்த நடிகர்கள் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

-விளம்பரம்-
Vanathai Pola completes 100 episodes; Swetha Khelge, Thilak and others  thank fans - Times of India

அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் தமன் குமார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் வானத்தைப்போல சீரியலில் பாசக்கார அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். தன்னுடைய 14 வயதிலேயே நடிக்க சென்னைக்கு வந்தார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஸ்கிரிப்ட் டைரக்டிங் மீது அதிக ஆர்வம் இருந்ததால் இவர் அதில் கவனம் செலுத்தினார். அதன் மூலமாக இவர் சினிமா வாய்ப்பு தேடினார். பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பெற்றோர் ஆசையின்படி ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு கிடைத்த பலரின் அறிமுகத்தால் நடிப்பைக் கற்றுக் கொள்ள தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சி சேர்ந்தார். அவரிடம் தமன் முறையாகவும் நடிப்பைப் பயின்றார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு ஆடிசன்களில் கலந்துகொண்டு நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தான் இவர் ஆச்சரியங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதற்குப் பிறகு தொட்டால் தொடரும், சேதுபூமி, புயலா கிளம்பிவரும், 6 அத்தியாயம், நேத்ரா போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால், இவர் நினைத்த வெற்றி அமையவில்லை.

Thaman Kumar has high hopes on his next action flick 'Sethu Bhoomi'

அந்த சமயத்தில் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிக்க முதலில் தயங்கினார். பின் சன் டிவி என்றவுடன் துணிந்து நடிக்க வந்தார். வானத்தைப்போல சீரியலில் அண்ணன் சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது அனைவரின் பாசக்கார அண்ணனாக மாறி விட்டார். அது மட்டுமில்லாமல் தமன் விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் அவரின் நெருங்கிய நண்பரும் ஆவார். வெள்ளித்திரையில் கிடைக்காத வெற்றி சின்னத்திரையில் கிடைத்ததால் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார் தமன் குமார்.

-விளம்பரம்-
Advertisement