முத்தக்காட்சியில் அடுத்த கமல் தனுஷ்தான்..! கிண்டல் செய்த பிரபல நடிகை.!

0
235
Dhanush

நடிகர் தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் மற்றும் நடிகர்கள் கிஷோர் ,சமுத்ரகனி, கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

vada-chennai

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த டீஸரில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முத்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி, இந்த முத்த காட்சியில் நடித்துள்ள நடிகர் தனுஷை உலகநாயகன் கமலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். தனுஷின் முத்த காட்சியை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ள நடிகை கஸ்தூரி “வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் கமல் சிறந்த நடிகர் என்பது நாம் அறிந்த ஒரு விடயம் தான். அதே போல அவர் முத்த காட்சிக்கு மிகவும் பெயர் போனவர் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது நடிகர் தனுஷை முத்த காட்சிகளில் நடிகர் கமலுடன், நடிகை கஸ்தூரி ஒப்பிட்டு பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.