விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.
கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி அங்கே சிகிச்சை சரியில்லாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வடிவேல் பாலாஜி.
வடிவேல் பாலாஜியின் உடல் இவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, ராமர், புகழ் என்று பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா என்று கதறி அழுதுள்ளார்.