மாரி செல்வராஜ் படத்தில் கமிட் ஆன வடிவேலு – ஹீரோ யார் தெரியுமா ? இதோ விவரம்.

0
786
vadivelu
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் 2006 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் வந்தார். பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள்.

-விளம்பரம்-
Karnan': Mari Selvaraj corrects the factual error indicated by Udhayanidhi  | Tamil Movie News - Times of India

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி தந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தனுஷ்ஷை வைத்து ‘கர்ணன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படி ஒரு இயக்கிய இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதே போல் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ்–உதயநிதி காம்பினேஷனில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக மாரி செல்வராஜ்ஜூம், வடிவேலும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு அவர்கள் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வடிவேலுவின் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement