“வாம்மா மின்னல்” அந்த பொண்ணு நான் தான் ! யாரடி நீ மோகினி சீரியல் நடிகை விளக்கம்

0
9246
Actress Deepa (2)

நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த சினிமா வாழ்க்கை, நிஜத்தில் வேற மாதிரி இருக்கு. ஆனாலும், என் கொள்கையில் உறுதியா இருக்கேன். எனக்கு வரும் கேரக்டர்களில் திருப்திகரமா நடிக்கிறேன்” என்கிறார், ‘மாயி’ படத்தின் ‘மின்னல்’ தீபா. ஜீ தமிழ் சேனலின் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துவருபவர்.

deepa actress

மாயி’ படத்தில் நடிக்கும்போது உங்க கேரக்டர் பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா?
“இல்லவே இல்லை. அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துக்கப் போனால், பெரிய படையே காத்திருந்துச்சு. ‘இந்த க்யூவுல நான் நிற்க மாட்டேன்’னு என் அப்பாகிட்ட அடம்பிடிச்சேன்.

அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் அப்பாவின் நண்பர். அவர் மூலமா டைரக்டரைச் சந்திச்சோம். அவர், கண்ணை ஒரு மாதிரியா உருட்டி நடிச்சுக்காட்டச் சொன்னார். ‘அப்படியெல்லாம் எனக்கு நடிக்க வராது’னு சொல்ல, ‘அப்படின்னா கிளம்புங்க’னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன். அப்புறம், அந்த டைரக்டரே அப்பாகிட்ட என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி கண்ணை உருட்டி நடிக்க பிராக்டீஸ் பண்ணினேன்.

ஆடிஷனில் செலக்ட் ஆனேன். டல் மேக்கப் போட்டாங்க. ‘வாம்மா மின்னல்’ என்கிற அந்த சீனில் நடிச்சேன். ஒரே ஒரு சீன், இதுல என்ன பெரிய ரீச் கிடைச்சுடப்போகுதுனு நினைச்சேன். ஆனால், இப்போவரை ‘மின்னல்’ தீபானுதான் என்னைக் கூப்பிடறாங்க. அந்த சீனில் நடிக்கும்போது, ‘அங்கே பாரு… அங்கே பாரு சரத்து… அந்தப் பொண்ணு எப்படி நடிக்குது பாரு’னு சொல்லி, வடிவேல் சார் பயங்கரமா சிரிச்சார்.

deepa

யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி…”

சென்டிமென்ட் மற்றும் திகில் கலந்த சீரியல். பேய்கிட்ட அடிவாங்கும் அனுபவம் நிறையவே இருந்துச்சு. திகில் காட்சிகள் நல்லா வரணும்னு, சக ஆர்டிஸ்ட் பலரும் நிஜமாவே அடிவாங்கி நடிச்சோம். சீரியலில் என் கேரக்டர் பெயர், பூங்கோதை. என் ஜோடியா வர்ற அர்விந்த் என்னை ‘ஜிலேபி’னு கூப்பிடும் காட்சிகள் நிறைய வரும். அதனால், இப்போ வெளியில் என்னைப் பார்க்கிறவங்க ‘ஜிலேபி’னு கூப்பிடறாங்க.