வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல் : ராஜ்கிரண் படத்திற்கு முன்பாகவே டி ஆர் படத்தில் நடித்துள்ள வடிவேலு. எந்த படம் தெரியுமா ?

0
2200
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு என்று பலரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-
என் தங்கை கல்யாணி படத்தில் வடிவேலு

நடிகர் வடிவேலு அவர்களை சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரன் தான் என்று பல இடங்களில் சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம். பலமுறை நடிகர் ராஜ்கிரன் அவர்களே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று கூறி உள்ளார். பிறகு வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப்படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வடிவேலு அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வடிவேலு அவர்கள் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.இதற்குப் பிறகு தான் நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தான் வடிவேலு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் தான் வடிவேலுவின் பெயர் டைட்டில் கார்ட்டில் வந்தது. எனவே, இந்த படம் தான் வடிவேலுவின் முறையான முதல் சினிமா அறிமுகம் என்றும் கருதப்படுகிறது.இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை தான் முதலில் கொடுத்திருந்தார் ராஜ் கிரண்.

-விளம்பரம்-
Advertisement