அம்மாவிற்கு புற்று நோய், விரைவில் விவாகரத்து, பல வருடங்கள் கழித்து கிடைத்த சீரியல் வாய்ப்பு – பர்சனல் பகிர்ந்த காமெடி நடிகை.

0
1999
priyanka
- Advertisement -

வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த அளவிற்கு குறைவான காமெடி நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் காமெடி நடிகை பிரியங்காவும் ஒருவர். வடிவேலுடன் இவர் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். பின் இவர் இடையில் சில காலம் பிரேக் எடுத்து கொண்டார். மேலும், இவர் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தாலும் சின்னத்திரையில் பயங்கரமான வில்லியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் அனுபவம் குறித்து கூறியிருப்பது, பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என் அக்கா கணவர் மூலமாக எதார்த்தமாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிலர் என்னை நேர்காணல் பண்ணினார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : என்ன ஹீரோன்னு நெனச்சி லிப் கிஸ் கொடுன்னு சொன்னார் – இயக்குனர் குறித்து பகீர் உண்மையை சொன்ன யாஷிகா. ஷாக்கிங் வீடியோ.

நடிகை பிரியங்கா அளித்த பேட்டி:

அப்படித் தான் மீடியா எனக்கு அறிமுகமானது. ஆங்கரிங் மூலம் தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. காதல் தேசம் படத்தில் தான் நான் முதலில் நடித்தேன். அந்த படம் எடுக்கும்போது முதல் ஷாட்டை ரொம்ப நேரம் எடுத்தாங்க. கருப்பு மேக்கப் போட்டு கருப்பா இருந்தேன். அந்த படத்தையே ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் நான் பார்த்தேன். அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் வாய்ப்பு வந்திருந்தது. பின் குடும்ப சூழல் காரணமாக மீடியாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டேன்

-விளம்பரம்-

சீரியல் அனுபவம்:

கொரோனா லாக் டவுன் காரணமாக எல்லாமே முடங்கிவிட்டது. இப்பதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. என்னதான் சினிமாவில் காமெடியாக நடித்தாலும் சின்னத்திரையில் நான் வில்லி. பொதுவாக சீரியலில் வில்லியாக நடிக்கவர்களை நேரில் பார்க்கும்போது ஆடியன்ஸ் திட்டு வாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், என்னை யாரும் திட்ட மாட்டாங்க. நான் நடித்ததில் அவர்களுக்கு பிடித்த காமெடியை சொல்லி என்னைப் பாராட்டுவார்கள். அதிலும் வடிவேல் சார் யாருன்னு தெரியாது வயதிலேயே அவருடன் நடித்தேன்.

அஜித் குறித்து சொன்னது:

அவரும் கிட்டத்தட்ட பத்து வருஷமாக பெருசா நடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன். நான் கல்யாணத்துக்கு பிறகு மீடியாவில் இருந்து விலகி வந்ததால் சினிமா பற்றி எதுவும் தெரியாது. இப்ப தான் அவர் இத்தனை வருஷம் நடிக்காமல் மறுபடி நடிக்க வந்திருக்கிறார் என்று தெரிந்தது. அதோடு என் பர்சனல் வாழ்க்கை விவாகரத்தை நோக்கி போயிட்டு இருந்தது. அதற்கு பிறகு தான் நடிக்க வந்தேன். மேலும், அஜித் சாருடன் வில்லன் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அஜித் சாரை ரொம்ப பிடிக்கும்.

ரீ என்ட்ரி குறித்து சொன்னது:

அவரை பார்க்கும்போது சரி அவருடன் படங்களில் நடிக்கும்போது சரி ஒரு அண்ணன் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் அவரை பார்த்துட்டு இருக்கோம். இப்பவும் அம்மா கிட்ட அஜித் சார் பற்றி கேட்டால் பெரிய பையன்னு தான் சொல்லுவாங்க. பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது நன்றாக இருக்கிறது. மேலும், என் அம்மாவிற்கு கேன்சர் அவருக்கு தற்போது சிகிசிகைகள் சென்று கொண்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Advertisement