இறுதி வரை உழைத்து சாப்பிட்டு வந்த ரங்கம்மா பாட்டி – வறுமை காரணமாக ஊர் திரும்பிய நிலையில் தற்போது பரிதாப பலி.

0
708
rangamma
- Advertisement -

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் பாட்டி. இவருக்கு தற்போது 83 வயது ஆகிறது. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களிலும் ரங்கம்மா பாட்டி நடித்திருக்கிறார். அதிலும் இவர் வடிவேல், கஞ்சா கருப்பு போன்ற காமெடி நடிகர்களின் படங்களில் இணைந்து நிறைய காமெடி காட்சியில் நடித்து இருக்கிறார். இதுவரை இவர் 500க்கும் மேல் படங்களில் நடித்திருக்கிறார். பின் பட வாய்ப்பு இல்லாததால் சில காலம் ரங்கம்மா பாட்டி வறுமையில் வாடி இருந்தார். இருந்தும் இவர் பிறர் கை ஏந்தாமல் மெரினா கடற்கரையில் கைக்குட்டைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்று தன் பிழைப்பு நடத்தி இருந்தார்.

- Advertisement -

ரங்கம்மா பாட்டியின் நிலைமை:

ரங்கம்மாள் பாட்டி தற்போது தன்னுடைய கடைசி காலகட்டத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டு இருந்தார். இறுதியாக ரங்கமா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் தன்னுடைய உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்திருந்தார். சமீபத்தில் கூட ரங்கம்மா பாட்டியிடம் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் ரங்கம்மா பாட்டி கூறியது, நான் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போ உடம்பு முடியாமல் போனதால் படங்களில் நடிக்க முடியவில்லை.

ரங்கம்மா பாட்டி செய்த தொழில்:

நான் நடித்த முதல் படமே எம்ஜிஆர் உடைய விவசாயி படத்தில் தான். என்றும் மறக்க முடியாது. நான் சம்பாதித்த பணத்தை பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். இப்போதும் நடிக்க தயாராக இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியில்லை. இதனால் கடற்கரையில் கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். அதேபோல் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்து வந்தேன். ஆனால், அதை வெளியில் சொல்ல மாட்டேன்.

-விளம்பரம்-

ரங்கம்மா பாட்டியின் லட்சியம்:

எனக்கு சில வருடமாக உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். அப்போது நிறைய செலவாகி விட்டது. அதனால் தான் வறுமை வந்து விட்டது. இருந்தும் எனக்கு யார்கிட்டேயும் உதவி கேட்க தோன்றவில்லை. உழைத்து தான் சாப்பிட வேண்டும். யாரிடமும் கை ஏந்தி நிற்க கூடாது என்று எம்ஜிஆர் சொன்னதை நான் பின்பற்றுகிறேன். எனக்கு எம் ஜி ஆர் என்றால் உயிர். அவருடைய போட்டோவை நான் கையில் பச்சை எல்லாம் குத்தி வைத்திருக்கிறேன்.

ரங்கம்மா பாட்டி மரணம்:

சாகும் வரை உழைத்து தான் சாப்பிட்டுவிட்டு செல்லுவேன் தவிர பிறர் உழைப்பில் வாழ மாட்டேன் என்று பேசி இருந்தார். இப்படி வாழ்வின் இறுதி வரை நேர்மையாக இருந்த ரங்கம்மா பாட்டி தற்போது காலமாகி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் மரணமடைந்ததை தொடர்ந்து அன்னூர் தெலுங்குபாளையத்தில் இறுதி சடங்கு இன்றே நடைபெறுகிறது. இதனையடுத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement