இனி ஷங்கர் பக்கமே தலை வைக்க மாட்டேன், அது மாதிரி படத்துலயும் நடிக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி. வீடியோ இதோ.

0
1669
vadivelu
- Advertisement -

ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்சனை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது. வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்த்துள்ளது. இதை தொடர்ந்து வடிவேலு, லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க உள்ளதாக கூறி இருந்தார்.

- Advertisement -

அதன் படி லைகா நிறுவனம் தயாரிப்பில் தலைநகரம் பட இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய வடிவேலு, எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கன்னிவெடி வச்சாங்க.. எல்லாத்திலும் தப்பித்து விட்டேன். என் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய். இனிமேல் சங்கர் தயாரிப்பில் இயக்கத்தில் நடிக்க மாட்டேன். அதுபோல் வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வி சேகர், வடிவேலுவின் ரெட் கார்டு நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல் தான் என்றும், அவர் தான் லைகா நிறுவனத்திடமும் ஷங்கரிடமும் பேசி இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க உதவி செய்தார் என்றும் கூறி இருந்தார். தற்போது வடிவேலு, சந்திரமுகி 2, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என்று கமிட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement