பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் அஞ்சலி :

இந்நிலையில் நடிகர் மயிலசாமியின் மறைவுக்கு ரஜினி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், சித்தார்த்த, நாசர், சூரி, மன்சூர் அலிகான், சதீஸ், விஜய் சேதுபதி போன்று பல நடிகர்கள் நேரில் வந்து நடிகர் மயில்சாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதற்கு பிறகு மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் பிரபல நகைச்சுவை நடிகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

மயில்சாமி நண்பர் மதன் பேட்டி :

இந்நிலையில் மயில்சாமியின் நண்பர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் “மயில்சாமி இறந்த தகவல் கிடைத்தவுடன் முதல் ஆளாக நான் தான் அவரது வீட்டிற்கு சென்று சாங்கியதற்கு தேவையானதை செய்த தொடங்கினேன். பின்னர் தான் மற்றவர்கள் வர தொடங்கினர். மயில்சாமியின் இறுதிச்சடங்கில் கண்டிப்பாக நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்க வேண்டும். என்னதான் பிஸியாக இருந்தாலும் அணைத்து நடிகர்களும் சென்னையில் தான் இருக்கிறார்கள். எனவே அங்கு வந்து செல்வதில் பிரச்னை இருந்திருக்காது.

வடிவேலு என்ற ஒரு நடிகர் இருக்கிறார் :

சொல்லப்போனால் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரே படப்பிடிப்பில் இருந்து வந்து மயில்சாமியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது மற்ற சிறிய நடிகர்கள் வருவதற்கு என்ன தடை என்று தெரியவில்லை. மயிலசாமியின் மறைவு செய்தியை கேட்ட நடிகர் சித்தார்த்த போன்றவர்கள் விரைவில் வந்துவிட்டனர். ஏனென்றால் அவர்களுடன் மயில்சாமி மிகவும் எப்படி நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள் என்று எனக்கு தெரியும்.

Advertisement

விவேக் பிறகு மயில்சாமி :

இப்படி இருக்க நடிகர் வடிவேலு என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரும் மக்களை சிரிக்க வைபவர்தான் ஆனால் வழக்கை என்று வரும் போது எந்த விஷதையும் இறங்கி செய்யயமாட்டார். மக்களுக்கும் எதுவும் குடுத்த்தும் கிடையாது. ஆனால் நடிகர் விவேக் மக்களுக்காக அதிகம் செய்திருந்தார் அதனால் தான் அவரின் மறைவின் போது அவ்வளவு கூட்டம். அதற்கு பிறகு ஒரு காமெடி நடிகரான மயில்சாமியின் மறைவுக்கு அவ்வளவு கூட்டம் வந்ததற்கு கரணம் அவர் மக்களுக்கு செய்த நம்மைகள்.

Advertisement

இரங்கல் கூட தெரிவிக்காத வடிவேலு :

துப்புரவு தொழிலாளர்கள் முதற்கொண்டு உதவி செய்கிறார்கள், அவர் பணம் சம்பாதிக்கா விட்டாலும், நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் அதனால் தான் அவ்வளவு கூட்டம். அதே போல விவேக் இறந்த போது கூட வடிவேலு அவரது இறுதி சடங்கிற்கு வரவில்லை. மாறாக விவேக் மறைவு குறித்து தனது இரங்கலை வீடியோவாக வெளியிட்டு இருந்தார் வடிவேலு. ஆனால், மயில்சாமி இறப்பிற்கு வடிவேலு ஒரு இரங்கல் செய்தியை கூட தெரிவிக்கவில்லை.

Advertisement