ரொம்ப பயமா இருக்கு, தயவு செஞ்சி வெளிய வராதீங்க. கண்கலங்கி கேட்டுக்கொண்ட வடிவேலு.

0
1564
vadivelu
- Advertisement -

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசினால் 21 ஆயிரத்திற்கும் மேல் பலியாகியுள்ளனர். சர்வதேச அளவில் இந்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகப் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 642 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான்.

-விளம்பரம்-

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : அஜித் ஸ்டைலில் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலுக்கு மாறிய சமீரா. கிண்டல் செய்தவர்களுக்கு கொடுத்த பதிலடி

- Advertisement -

அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, மனவேதனையுடன், துக்கத்துடன் சொல்றேன் எல்லாரும் தயவுசெய்து அரசாங்கம் சொல்கிற அறிவுரையை கேட்டு நடங்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டுக்குள்ளேயே இருங்க.

மருத்துவ உலகமே மிரண்டுபோய் தன்னுடைய உயிரை பணயம் வைத்து இந்த உலகை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் நம் அனைவரையும் பாதுகாக்கிறார்கள். தயவு செய்து யாரும் வெளியே வராதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

-விளம்பரம்-

யாருக்காக இல்லை என்றாலும் நமது வம்சாவளிகளுக்காகவும், சந்ததிகளுக்காகவும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். யாரும் அசால்ட்டாக இருக்காதீர்கள். ரொம்ப பயமாக இருக்கிறது. தயவுசெய்து யாரும் வெளியில் போகாதீர்கள் என்று கண்கலங்கி அழுது ரொம்ப எமோஷனலாக கூறி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

இதையும் பாருங்க : நெருங்கிய நண்பரின் திடீர் இறப்பு, கடும் மன வருத்தத்தில் நடிகர் சந்தானம்.

தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

Advertisement