டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் தன்னை அறிமுகம் செய்த ராஜ்கிரண் குறித்து வடிவேலு உருக்கம்

0
269
- Advertisement -

ராஜ்கிரண், கமல் குறித்து நிகழ்ச்சியில் வடிவேலு கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கையாக இருந்த வெங்கடேஷ் பட் விலகியது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். தற்போது இவர் சன் டிவியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் VB Dace நிறுவனம் தான் தயாரிக்கிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், KPY முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

டாப் குக் டூப் குக்:

இந்த நிகழ்ச்சியில் சிங்கம் புலி, நடிகை சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் அம்மா பின்னி, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி கடந்த மே 19ஆம் தேதி சன் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலத்தான் இருந்தது. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் நிகழ்ச்சிக்கு நடிகர் வடிவேலுவை சன் டிவி களமிறக்கி இருக்கிறது.

நிகழ்ச்சியில் வடிவேலு சொன்னது:

மேலும், வடிவேலு வந்தவுடன் நிகழ்ச்சி இன்னும் கலகப்பாகி விட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு, என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள், வாழ வைத்த தெய்வம் என்றால் ராஜ்கிரன் தான். என் அம்மா, அப்பாவுக்கு பிறகு எனக்கு அவர் தான். அவர் என்னை பெத்த பிள்ளை போல் பார்த்துக்கொண்டார். மதுரையில் தமிழ்நாடு ஹோட்டல் ஒன்றில் தான் நான் முதன் முதலாக அவரை சந்தித்தேன்.

-விளம்பரம்-

ராஜ்கிரண் குறித்து சொன்னது:

அப்போது அவரிடம் நான் மோனோ ஆக்டிங் செய்து காட்டினேன். அதை பார்த்த அவர் ரொம்பவே ரசித்து பார்த்தார். என்னை நீ சென்னைக்கு வாடா என்று அழைத்து சென்றார். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் இருவருமே உச்சத்தில் இருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்குப் பிறகு உதயகுமார் தன்னுடைய படங்களில் படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும்படி என்னுடைய கதாபாத்திரத்தை கொடுத்தார்.

கமல் குறித்து சொன்னது:

சின்ன கவுண்டர் படத்திற்கு பிறகு கமலுடைய சிங்காரவேலன் படத்தில் நடித்தேன். அவர் என்னுடைய நடிப்பை பார்த்து கட்டிப்பிடித்து பாராட்டினார். அதற்கு பிறகுதான் தேவர் மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்பு முனையை கொடுத்தது கமல் சார்தான். அதற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தேன். ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று வடிவேலு எமோஷனலாக பேசியிருந்தார்.

Advertisement