தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் வடிவேலு. ஒரு காலத்தில் சினிமா உலகில் உச்சியில் இருந்த இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தி.மு.க சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம் பெற்றது. வடிவேலு பிரசாரம் செய்த இடமெல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக பேச பொதுமக்களே அதிர்ச்சியடைந்தனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 

ஆனால் எதிர்க்கூட்டணியில் இருந்து பிரச்சாரம் செய்ததற்காக வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் காலம் அவர் இல்லாமல் தான் தமிழ் சினிமாவே இருந்தது. அதில் இருந்தே வடிவேலு மீது மக்கள் ஏகப்பட்ட வெறுப்பில் ஆழ்ந்து இருந்தனர். நடிகர் வடிவேலு அவர்களை சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரன் தான் என்று பல இடங்களில் சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம்.

Advertisement

பலமுறை நடிகர் ராஜ்கிரன் அவர்களே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று கூறி உள்ளார். பிறகு வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப்படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். இந்நிலையில் தற்போது வடிவேலு அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வடிவேலு அவர்கள் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.இதற்குப் பிறகு தான் நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் வடிவேலு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் தான் வடிவேலுவின் பெயர் டைட்டில் கார்ட்டில் வந்தது.

Advertisement

எனவே, இந்த படம் தான் வடிவேலுவின் முறையான முதல் சினிமா அறிமுகம் என்றும் கருதப்படுகிறது.இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை தான் முதலில் கொடுத்திருந்தார் ராஜ் கிரண். ஆனால், இவரது திறமை பிடித்துப்போக இவருடைய நடிப்பு திறனை பார்த்து இவரையே ஒரு பாடலையும் பாட வைத்து இருப்பார் ராஜ்கிரண். ஆனால், தனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக வடிவேலு கண்டுகொள்ளவில்லை.

Advertisement

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இந்த விழாவில் பல்வேரு பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர். இந்தவிழாவில் ராஜ்கிரணுடன் தான் வடிவேலு பேட்டரி காரில் சென்றார். இப்படி ஒரு நிலையில் உள்ளே சென்றதும் ராஜ்கிரணை கட்டிப் பிடித்து கதறி அழுதார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement