நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் வடிவேலு கடந்து வந்த பாதை அத்தனை எளிதல்ல.
தனது சிறு வயதிலிருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வந்துள்ளார்.பின்னர் சினிமா மீது இருந்த மோகத்தால் ஊரில் இருந்து கையில் வைத்திருந்த கொஞ்சம் பணத்தை வைத்து சென்னைக்கு புறப்பட்ட வடிவேலு, லாரியில் மேற்கூரையில் படுத்தவாறு சென்னை வந்துள்ளார்.
அந்த சமயத்தில் லாரியின் உள்ளே பயணம் செய்ய வேண்டும் என்றால் 25 ரூபாய் அதனால் 15 ரூபாய் கொடுத்து மேற்கூரையில் தூங்கியவாறு பயணம் செய்துள்ளார் வடிவேலு. இடையில் தூங்கியதால் பையில் வைத்திருந்த 80 ரூபாய் பணமும் காற்றில் துளைந்துள்ளது. அதன் பின்னர் லாரி டிரைவரிடம் பணம் துளைந்துவிட்டது என்று புலம்பியுள்ளார் வடிவேலு.
பின்னர் அந்த லாரி டிரைவர் வடிவேலுக்கு ஹோட்டலில் உணவை வாங்கி கொடுத்துவிட்டு கொஞ்சம் பணத்தையும் கொடுத்து சென்னையில் இறக்கி விட்டிருக்கிறார். அதன் பின்னர் சென்னை வந்து சேர்ந்த வடிவேலு ராஜ் கிரணிடம் அறிமுகமாகி அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யத் துவங்குகிறார் வடிவேலு. இவரின் நடிப்புத் திறனைக் கண்டு தன்னுடைய ‘என் ராசாவின் மனதிலே’ என்ற படத்தில் நடிக்க வைக்கிறார் ராஜ் கிரண்.