வேலைகள் செம ஸ்பீடுல நடந்துட்டு இருக்கு. யார் இயக்குநர்னு விரைவில் சொல்றேன் – வடிவேலுவின் மாஸ் ரீ- என்ட்ரி.

0
1150
vadivelu

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்தால் மூன்று திட்டங்களை கடைபிடிக்க உள்ளதாக அறிவித்துஇருந்தார். மேலும், தனக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் ஆனால் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்றும் அதற்காக முதலில் ரசிகர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார் ரஜினியின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரித்தும் விமர்சித்தும் வந்தனர்.

இதை தொடர்ந்து நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார். சுவாமி தரிசனத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் ரஜினி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருக்கும் தெரியாது ரசிகர்களுக்கும் தெரியாது வேறு யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : வாலி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த இரண்டு நடிகைகள் தான்.

- Advertisement -

ஆனால், இவர் வராமல் மற்றவை முதலமைச்சர் ஆக்குவேன் என்று கூறியுள்ளது அற்புதமான விஷயம் என்றும் கூறியிருந்தார் வடிவேலு. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, `நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்னிடம் ரஜினி பேசியது குறித்து பேசி கேட்டதற்கு நான் பதில் சொல்லி இருந்தேன். ப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும். பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன் என்று சொல்லிட்டு நான் பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன்.

நான் தான்யா அடுத்த சி.எம் : வடிவேலு பஞ்ச்

நான் தான்யா அடுத்த சி.எம் : வடிவேலு பஞ்ச் #vadivelu #rajini.tiruchendur

Dinamalar – World's No 1 Tamil News Website ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮಾರ್ಚ್ 12, 2020

அதன் பின்னர் திடீர் என்று ஒரு நாள் போன். `என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார். `ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம்” என்று கூறியுள்ளார். மேலும், பேசிய வடிவேலு தான் நடிக்க போகும் வரும் வெப் சீரியஸ் குறித்தும் பேசி இருந்தார். அதில்’வெப்சிரீஸ் வேலைகள் செம ஸ்பீடுல நடந்துட்டு இருக்கு. யார் இயக்குநரு, என்ன வெப்சீரிஸ்னு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement