‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ தன்னையே கை காண்பித்து பாடிக்கொண்டு வடிவேலு – வீடியோ இதோ.

0
1476
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.

இதையும் பாருங்க : காதலர் தினத்தில் கணவருக்கு லிப் லாப் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சுஜா.

- Advertisement -

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார்.

நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வைகைபுயல் வடிவேலு சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்டார் அந்த நிகழ்வின் படங்கள் சமூக ஊடகங்களில்வைரலாக பரவியது. நகைச்சுவை நடிகர் வடிவேலுவினை மிக நீண்ட காலத்திற்குப் பிறகு ரசிகர்கள் முன் தோன்றியது குறிப்பிடத்தக்கது . சந்தனா பாரதி, மனோபாலா, கங்கை அமரன், மதன் பாப் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல குறிப்பிடத்தக்க பெயர்களுடன் வடிவேலு அந்த நிகழ்வில் காணப்பட்டார்.

-விளம்பரம்-

இப்போது, ​​அதே நிகழ்விலிருந்து ஒரு புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, இந்த வீடியோவில், பிரபல பாடகர் முகேஷுடன் வடிவேலு பாடுகிறார் . சிவாஜி கணேசன் நடித்த கர்ணனின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற உன்னதமான தமிழ் பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடினர். அப்போது வடிவேலு சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரியை பாடும் போது தன்னை கை காண்பித்து கொண்டார் வடிவேலு.

Advertisement