வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் தெரியுமா !

0
2684
vadivelu
- Advertisement -

மதுரையைச் சேர்ந்தவர் நம்ம வைகைப்புயல் வடிவேலு. இவருடைய அப்பா நடராசன் அம்மா சரோஜினி அம்மாள். வைகைபுயலின் உடன் பிறந்தவர்கள் 4 பேர். கண்ணிகா, கார்த்திகா, கலைவாணி மற்றும் சுப்ரமணி ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர். சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் காட்டியதில்லை நம் மீம் கிரியேட்டர்ஸ்களின் கடவுள் வடிவேலு. தனது சிறு வயதிலிருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வந்துள்ளார்.
Vadiveluஎதிர்பாராத விதமாக தனது சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்து போக பொருளாதார ரீதியாக அவரது குடும்பம் சற்று மோசமான நிலைமைக்கு தள்ளப்படுகிறது. பின்னர் புகைப்படங்களுக்கு ஃப்ரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வேலை செய்கிறார்.

-விளம்பரம்-

ஒரு முறை வகைப்புயலின் ஊருக்கு பட்பிடிப்பு சம்மந்தமாக ராஜ் கிரண் வருகிறார். அப்போது ராஜ் கிரணிடம் அறிமுகமாகி அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யத் துவங்குகிறார் வடிவேலு. இவரின் நடிப்புத் திறனைக் கண்டு தன்னுடைய ‘என் ராசாவின் மனதிலே’ என்ற படத்தில் நடிக்க வைக்கிறார் ராஜ் கிரண்.
Vadiveluதான் நடித்த அந்த முதல் படத்திலேயே ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடலையும் பாடி அசத்துகிறார் வடிவேலு. ஆரம்ப கால்த்தில் செந்தில்-கௌண்டமணியுடன் சேர்ந்து சின்ன சின்ன நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த வடிவேலுவின் முதல் தனி நகைச்சுவை நடிகர் படம் சங்கரின் நடிப்பில் வெளிவந்த ‘காதலன்’ படமாகும்.

- Advertisement -

பின்னர் அந்த படம் பெரும் ஹிட் ஆக 2000ஆம் ஆண்டிற்க்குள் அசைக்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கொடிநாட்டினார். அதற்கு அடுத்த படியாக 2003ஆம் ஆண்டு வந்த ‘வின்னர்’ படம் அவரது சினிமா வாழ்க்கையில் அவரது அடுத்த லெவலிற்கு தூக்கி விட்டது.
Vadiveluஆரம்ப கால ஏழ்மை வாழ்வை மறக்காத வைகைபுயல் அவரது மகனிற்கு சிவகாசியில் கூரை வீட்டில் வசித்து வந்த ஒரு ஏழைப் பெண்ணை திருமனம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழமையான நிலையில் இருந்து சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் வைகைபுயல் வடிவேலு ஒரு எடுத்துக்கட்டாகவே விளங்குகிறார்

Advertisement