தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.

Advertisement

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது.

Advertisement

இதனால் கடந்த சில ஆண்டுகளாக வடிவேலுவை திரைப்படத்தில் காண முடியவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்களின் ராஜாவாக வடிவேலு திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு புதிதாக ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்ற செய்திகள் வெளியானது . மேலும், வடிவேலு என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்றில் பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது.

Advertisement

அதனால் ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய்#சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் குறிப்பிடபட்டிருந்தது. வடிவேலு மீண்டும் ட்விட்டரில் இணைந்ததை அறிந்த ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் , இந்த கணக்கு ஆரம்பித்த 2 நாட்களிலேயே இந்த கணக்கை 35 ஆயிரத்திற்கும் மேல் பின் தொடர்ந்தும் உள்ளார்கள்.

ஆனால், வடிவேலு பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று வடிவேலு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கபட்டுள்ள போது, அக்கணக்கு 2013-ம் ஆண்டு இயக்குநர் யுவராஜ் ஆரம்பித்து வைத்த ட்விட்டர் கணக்கு அது. நான் இப்போது அந்தக் கணக்கை பயன்படுத்துவதில்லை. எனது பெயரை வைத்து யாரோ புதிதாக கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள். நான் தற்போது ட்விட்டரில் இல்லை” என்றுகூறியுள்ளார்.

இதுஒருபுரம் இருக்க,

Advertisement