தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி மட்டும் என்ன விதிவிலக்கா. மேலும், கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்பட்டது. இதனால் பல தரப்பில் இருந்து கண்டனக்குரல்களும், வரவேற்புகளும் வந்துள்ளது. அதோடு ரஜினியின் அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைக்க rajinimandram.org என ஒரு இணையதளத்தை துவங்கினார் ரஜினிகாந்த். இதற்கென ஒரு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் அறிமுகம் செய்தார். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இப்போ வரேன் அப்போ வரேன் என்று ரசிகர்களுக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் ரஜினி. இதுமட்டும் இல்லாமல் ரஜினிகாந்த அவர்கள் இன்னும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன் பிறகு தான் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்தால் மூன்று திட்டங்களை கடைபிடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

Advertisement

இதையும் பாருங்க : ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தாராள பிரபு எப்படி உள்ளது – முழு விமர்சனம்.

மேலும் தனக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் ஆனால் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்றும் அதற்காக முதலில் ரசிகர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார் ரஜினியின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானான வடிவேலு, ரஜினியின் நேற்றைய பேச்சு குறித்து கிண்டலடித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் பட பிரச்சினையில் சிக்கியதால் தற்போது சினிமாவில் நடிக்க தடையை பெற்றிருகிறார்.

Advertisement

சமீபத்தில் நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார் சுவாமி தரிசனத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் நேற்று ரஜினி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வடிவேலு ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருக்கும் தெரியாது ரசிகர்களுக்கும் தெரியாது வேறு யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் 2021ல் நானும் முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் முதலமைச்சர் ஆகி விடுகிறேன் 2021ல் நான் தான் முதலமைச்சர் என்று தனது பாணியில் கிண்டலாக சொல்லிவிட்டு கிளம்பினார் வடிவேலு.

Advertisement
Advertisement