வடிவுக்கரசி 45: கேப்டனின் குரலை கேட்டு உறைந்து போன அரங்கம் – நெகிழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் சொன்னது

0
261
- Advertisement -

45 ஆண்டுகால சினிமா பயணத்தை கடந்த நடிகை வடிவுக்கரசிக்கு சிறப்பு விழா நடத்தப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ‘வடிவுக்கரசி’. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். இவர் 1978 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சிவப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், இவர் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வடிவுக்கரசி 45 சினிமா:

இப்படி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளையும் கடந்து இவர் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கையில் 45 வருடம் கடந்ததை ஒட்டி இவருக்கு இவருக்கு சிறப்பு விழா நடைபெற்று இருந்தது. இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியும், பெருமையாகவும் பேசி இருந்தார்கள். அப்போது வடிவுக்கரசி மேடைக்கு வந்த உடனே விஜயகாந்தின் குரல் கேட்டது. அதில், முதலாளி அம்மா. நீங்கள் சினிமாவில் 45 வருடம் பயணித்திருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.

விஜயகாந்த் குரல்:

நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும். உங்களுடைய முதல் தயாரிப்பில் நான் தான் ஹீரோவாக நடித்திருந்தேன். உங்களுடைய கலைப்பயணம் என்றென்றும் தொடரும். உங்களைப்போல ஒரு திறமையான நேர்மையான ஒருவருடன் பயணம் செய்ததை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. உங்களுடைய தைரியத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு நிறைய தடவை நான் பிரேமலதாவிடம் பேசி இருக்கிறேன். எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் எடுத்த வேலையை பக்தியுடன் முடிக்க கூடியவர்.

-விளம்பரம்-

மேடையில் அழுத வடிவுகரசி:

நான் உங்களை விட்டு எங்கேயும் போகவில்லை முதலாளி அம்மா. நல்லவர்கள் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று அவருடைய குரலில் பேசி இருந்த ஆடியோ வெளியாகியிருந்தது. இதை கேட்டு வடிவுகரசி அழுதிருந்தார். பின் என்னை முதல் முதலாக தயாரிப்பாளர் ஆகியது கேப்டன் கேப்டன் சார். இதை நான் அவருடைய ஆசிர்வாதமாக வாங்கிக் கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார். அதற்கு பின்பு பிரேமலதா விஜயகாந்த், மேடைக்கு வந்து அவரை கௌரவித்திருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த் சொன்னது:

பின் பிரேமலதா விஜயகாந்த், நான் இங்க வந்ததற்கு ஒரே காரணம் கேப்டன் அவரும் மீது வைத்த மரியாதையும், வடிவுக்கரசி அம்மா அவர் மீது வைத்த அன்பும் தான். நான் அவரை கேப்டன் கோவிலுக்கு அழைத்தபோது கூட அவர் வரவில்லை. கேப்டன் இன்னும் நம்ம கூட தான் இருக்கிறார். அவர் எங்கும் போகவில்லை. உங்களை நான் வீட்டிற்கு வந்து சந்திக்கிறேன். அப்போது அவர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன். உங்களை அலுவலகத்தில் சந்தித்தால் அவர் வீட்டில் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன். அவர் இல்லை என்ற ஒன்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி இருந்தார். நானும் அவருடைய அன்பையும் பாசத்தையும் புரிந்து என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement