கன்னடத்துக்குள் தமிழும் இருக்குனு மறந்துடாதீங்க – கர்நாடகாவில் தமிழ்த்தாய் பாடல் அவமதிப்பிற்கு வைரமுத்து கணடனம்.

0
378
Vairamuthu
- Advertisement -

கர்நாடகாவில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதை அடுத்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் வரும் மே மாதம் பத்தாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதனால் கடும் போட்டி நிலவுகிறது.

-விளம்பரம்-

மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பிரச்சாரங்களை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 40 சதவீத கமிஷன், முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு ரத்து, அமூல் மற்றும் நந்தினி பால் விவகாரங்கள், ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் ஆளும் பாஜகவுக்கு எதிராக பரப்புறையை மேற்கொண்டு இருக்கின்றனர். அதோடு தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான்.

- Advertisement -

இதனால் நாடு முழுவதும் கர்நாடக தேர்தல் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருந்தது இருந்தாலும் ஒருமுறை கூட ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை வெல்லவில்லை. இந்த நிலையில் எப்படியாவது தனியாக நின்று வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டம் தொடங்கிய போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து திடீரென்று பாஜக முன்னாள் அமைச்சர் குறிக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

பின் அவர் கர்நாடக மாநில கீதத்தை பாடச் சொன்னார். தமிழ் தாய் வாழ்த்து பாதிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பிரச்சார கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர்,

“கர்நாடகா மேடையில்

தமிழ்த்தாய் வாழ்த்து

பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு

இடிவிழுந்த மண்குடமாய்

இதயம் நொறுங்கியது

ஒலிபரப்பாமல்

இருந்திருக்கலாம்;

பாதியில் நிறுத்தியது

ஆதிமொழிக்கு அவமானம்

கன்னடத்துக்குள்

தமிழும் இருக்கிறது;

திராவிடத்திற்குள்

கன்னடமும் இருக்கிறது

மறக்க வேண்டாம்”என பதிவிட்டுள்ளார். தற்போது வருத்தத்தில் வைரமுத்து பதிவிட்டு இருக்கும் பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement