வைரமுத்து மேல் பாலியல் புகார் கொடுத்த பெண்..! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!

0
432

சமீப காலமாக சினிமா துறைகளில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவுக்கு நடிகைகள் மட்டுமல்ல சில பெண் கலைஞர்களும் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் பெயர் தெரியாத இளம் பெண் கவிஞர் ஒருவர் தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் சந்தியா மேனன் என்ற பெண் கவிஞர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் தெரியாத இளம் பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், எனக்கு 18 வயது ஆகிறது நான் அவருடன் (வைரமுத்து) பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்றியபோது அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், தேசிய விருது பெற்ற கவிஞர் என்றும் நான் மதித்தேன்.

ஒருமுறை அவரிடம் நான் எழுதிய பாடல் வரிகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் என்னை கட்டியணைத்தும், முத்தம் கொடுத்ததும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அவருடைய அலுவலகமும் வீடும் கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னை தனிமையில் அவரை சந்திக்க பலரும் கூறினார்கள். அவர் சினிமா துறையில் பெரிய ஆள் என்பதால் அவர் செய்யும் தவறுகளை யாரும் கேட்பது இல்லை.

Vairamuthu

அவருக்கு அரசியலில் நிறைய ஆட்கள் தெரிந்திருப்பதால் அவர் செய்யும் தவறுகளை யாரும் வெளியே சொல்ல முடியவில்லை. நான் யார் என்று தெரியாத ஒரு பெண்ணாகவே இருந்து விடுகிறேன் என்று அந்த மேசேஜில் குஎய்ப்பிடட்டுள்ளது.ஏற்கனவே கவிஞர் வைரமுத்து தமிழ் கடவுள் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சையான கருத்தொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறியுள்ளது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.