‘முட்டிப்போடு, முட்டிப்போடு’ – வைரமுத்துவை கேலி செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகும் பாடல்

0
1930
Vairamuthu
- Advertisement -

கவிஞர் வைரமுத்துவை நெட்டிசன்கள் வைத்து செய்யும் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-
Chinmayi-vairamuthu

மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார்.

- Advertisement -

வைரமுத்து-சின்மயி சர்ச்சை:

இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். இருந்தும் வைரமுத்து தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இப்படி வைரமுத்து மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் இவர் மு க ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிக்கோச்சடையான் என்று அழைக்கப்டும் வைரமுத்துவை வைத்து செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் திலகம் பிரபு, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் டூயட். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மெட்டு போடு, மெட்டு போடு என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து முட்டி போடு முட்டி போடு என்ற வரிகளாக மாற்றி வெளியீட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில், ‘வைரமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு, ஒரு வழக்கிருக்குது வழுக்கிருக்குது முட்டிப்போடு… எத்தனை பிழைகள் கண்டோம் எத்தனை எத்தனை கறைகள் கண்டோம், அத்தனையும் பேனாக்குள்ளே சுருட்டிப்போடு… சீமைப்பால் கதைகள் சாக்கடைகள் வெட்கக்கேடு, உன் கற்பனைக்குண்டு காமனுக்கில்லை கட்டுப்பாடு… உன் வன்மப் பேச்சு தன் மானம் போச்சு, மை பேனாவால் பெண்கள் வாழ்க்கை போச்சு’ என்று வைரமுத்துவை கேலி கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பகிர்ந்து முட்டி போட்டு மன்னிப்பு கேட்கும் வரை பகிருங்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Advertisement