திண்டுக்கல்லுக்கு நேரில் வந்து நான் பெற்ற அந்த பரிசை நந்தினிக்கு தருகிறேன் – வைரமுத்து ட்வீட்.

0
730
Vairamuthu
- Advertisement -

திண்டுக்கல் மாணவி நந்தினி செய்த சாதனையை பாராட்டி கவிஞர் வைரமுத்து பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழகமே பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது திண்டுக்கல் மாணவி நந்தினியின் மதிப்பெண்கள் குறித்த விபரம் தான். சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகியிருந்தது. இதில் திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று ஆறு பாடங்களிலும் முழு பதிப் பெண்களைப் பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு நந்தினியை பலரும் பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த சாதனை குறித்து நந்தினி கூறி இருந்தது, இவ்வளவு மதிப்பெண் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் தான் எனக்கு ஊக்கம் அளித்தார்கள்.

- Advertisement -

திண்டுக்கல் மாணவி செய்த சாதனை:

படிப்பு மட்டும் சொத்து என்று கூறிதான் என்னுடைய பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள். படிப்பு தான் என்னுடைய சொத்து என்று நினைத்து தான் நான் படித்தேன். இந்த அளவுக்கு மதிப்பெண் கிடைத்தது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுகிறார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலருமே நந்தினியை பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில் வைரமுத்து நந்தினியை பாராட்டி டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

வைரமுத்து டீவ்ட்:

அதில் அவர், ஒரு தச்சு தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படி பாராட்டுவது? அண்மையில் நான் பெற்ற தங்கப் பேனாவை தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன் நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது வைரமுத்துவின் இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

வைரமுத்து திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வைரமுத்து குறித்து சர்ச்சை:

இதைத்தொடர்ந்து பலரும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வைரமுத்து தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

Advertisement