இந்த மூன்று பேரும் பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தான் – கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

0
2152
vairamuthu
- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கும், கமல்ஹாசனுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து மத்திய அரசை வலியுறுத்திய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாத் திரை துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருதை தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வாங்கினார். இதுவரை தமிழ் சினிமா உலகில் இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், இயக்குநர் கே பாலச்சந்தர் மட்டும் தான் வாங்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினிகாந்த் | rajini gets Dadasaheb  Phalke Award at delhi - hindutamil.in

இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். இந்த விருதை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து வாங்கினார். மேலும், விருது வாங்கிய ரஜினிகாந்த் அவர்கள் இதை என்னுடைய குரு கே பாலச்சந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த சமயத்தில் என்னுடைய நண்பர் ராஜ்பகதூருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனையடுத்து ரஜினிகாந்துக்கு விருது கிடைத்தது குறித்து பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : சிறந்த நடிகர், விருது பெற்றவருடன் பெறாதவர் – தேசிய விருது வென்ற நடிகருடன் பார்த்திபன் போட்ட பதிவு. (செம காண்ட்ல இருக்காரே)

- Advertisement -

இந்த நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியது, ரஜினிக்கு விருது கிடைத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதே போல் தமிழ் சினிமா உலகில் ஜாம்பவன்களான இசைஞானி இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து மத்திய அரசை வலியுறுத்தி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

-விளம்பரம்-

“பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி கவிஞர் வைரமுத்து பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement