சிரியா மண்ணே சிரி ! என்ற வைரமுத்துவின் கவிதை வைரலாகிறது – வீடியோ உள்ளே

0
3552
syriawar
- Advertisement -

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டு போர் என்ற பெயரில் மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவும் ரஸ்யாவும் உலகை தன் கட்டுக்குள் வைக்க நடத்தும் போர்களில் இதுவும் ஒன்று.

-விளம்பரம்-

Vairamuthu

- Advertisement -

கடந்த 7 ஆண்டுகளாக பல லட்சம் மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து தற்போது தமிழகத்தில் விழிப்புணர்வு வந்துள்ளது. பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வரும் இந்த வேளையில், கவிஞர் வைரமுத்து சிரியாவை எண்ணி உருகி, ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்த கவிதை கீழே :

-விளம்பரம்-

சிரியா மண்ணே சிரி – கவிதை

குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் சென்கிறது;
மேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..
கருக்குழியில் வளர்த்த சிசுக்களை; பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள்
தங்கள் கற்பை போல தாய் மார்கள்…!
சாந்தியும் சமாதானமும் நிலவகூரும் பிராத்தனை குரல்…நசுங்கி போகிறது
குழந்தைகள் கதறும் கூட்டோசையில்…
மீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்!
ரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் பறந்த கழுகுகள்!
வீடுகள் கான்கீரிட் கல்லறைகளாவதும்…
வீதிகள் உடல்களின் குப்பைத்தொட்டிகளாவதும்…
சாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பறிமாறப்படுவதும்…
அதிராத குரல்களில் உடையாடபடுகின்றனர் ஐ.நா-வின் தேநீர் இடைவெளிகளில்!
எலும்புக்கூடுகளில் எது சன்னி எது ஷியா?
தோண்டிய தொட்டக்களில் எது அமெரிக்க; எது ரஷியா?
எரியும் நெருப்பில் எது சவூதி; எது கொரியா?
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.
கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை….!
வழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை….!
அழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.
சிரியா மண்ணே சிறி!
வழியும் குருதியே வழி!
ஒலியா போறே ஒழி!
ரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்கு கேட்ட சகுனம்…!

Advertisement