சமீப காலமாக அடுத்த தளபதி யார் என்பது குறித்த செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்ல பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. இந்நிலையில் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி தளபதி விஜய் அரசியல் வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதனால், அரசியலில் தீவிரமாக களம் இறங்கும் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார். தற்போது கையில் இருக்கும் ‘தளபதி 69’ படத்துடன் அவர் நடிப்புக்கு குட் பை சொல்ல இருக்கிறார். நடிகர் விஜயின் இந்த முடிவு அவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த தளபதி:
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க. சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் பிரச்சனை ஓய்ந்திருக்கிறது. தற்போது தளபதியின் இடத்துக்கு போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்ற தகவல் தீயாய் பரவியது. அதை உறுதி செய்யும் வகையில் ‘கோட்’ படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஒரு காட்சியை வைத்திருந்தார். அதை வைத்து ரசிகர்கள் தளபதியின் இடம் சிவகார்த்திகேயனுக்கு தான் என கிளப்பிவிட்டனர்.
சிவகார்த்திகேயன் சொன்னது:
இந்த விஷயம் சர்சையாக பற்றி எரிந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஒரு நிகழ்ச்சியில் அடுத்த தளபதி யார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலக நாயகன் தான், ஒரே சூப்பர் ஸ்டார் தான். இந்த அடுத்த அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அவர்களது சினிமாவை பார்த்து தான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அவங்கள மாதிரி படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து, அவங்கள மாதிரி ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாகவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாது. அதை நான் தப்பென்று என்று நினைக்கிறேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
ரசிகர்கள் குழப்பம் :
ஆனால், இத்தனை நாட்கள் இது விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எதற்காக இவர் இப்போது மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுப்பப்பட்டது.இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் ஒன்றும் லேசு பட்டவர் கிடையாது. அவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்குத் தெரியும். அடுத்த தளபதி என்ற பட்டத்தை இவர் உண்மையில் விரும்புகிறார். ஆனால் வெளியில் அப்படியெல்லாம் இல்லை என ஒரு பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
வலைப்பேச்சு பிஸ்மி:
இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு கதையை கட்டி விட்டதே கூட அவராக இருக்கலாம். மேலும் இப்படி ஒரு விஷயம் பரவுவது சோசியல் மீடியாக்களில் விமர்சனமாக மாறியிருக்கிறது. அதை கவனித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் மறுப்பது போல் பேசி இருக்கிறார் என பிஸ்மி தெரிவித்துள்ளார். வலைப்பேச்சு பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்து இது போல் பேசுவது இது முதல் தடவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தற்போது ‘அமரன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாகிறது.