சினிமாவையே கேவலப்படுத்துறாங்க, மார்க்கெட் இருந்தா கூட பரவாயில்லை – நயன் குறித்து வலைப்பேச்சு சொன்னது

0
231
- Advertisement -

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி விமர்சித்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாகவே, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் பற்றிய செய்திகளும் வதந்திகளும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

ஆனால், தங்களை விமர்சிப்பவர்களுக்கு இவர்கள் இருவரும் பேட்டிகள் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் பதிலடி கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில் கூட, வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகளோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். அந்த விஷயம் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு வலைப்பேச்சு குழுவினரும் நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் மீண்டும் நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சினிமாவை கேவலப்படுத்துறாங்க :

அதில், நயன்தாரா சூட் முடிந்ததும் எனக்கு ஒரு தனி மானிட்டர் வேண்டும் என்று கேட்பதால் நான் அவரை தப்பே சொல்ல மாட்டேன். என்ன காரணம் என்றால், தயாரிப்பாளர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்தால் இதுபோல விஷயங்களுக்கு உடன்பட மாட்டார்கள். டைரக்டர் மற்றும் கேமராமேன் ஒரு சீன் சரியாக வருதான்னு செக் பண்ண மானிட்டர் பாப்பாங்க. இந்த மாதிரி சிஸ்டம் 90களில் தான் வந்தது. அதுக்கு முன்னாடி வியூ பைண்டர்ல தான் பாப்பாங்க. இப்படி இருக்கும்போது, எனக்கு தனியா மானிட்டர் வேணும், என் சார்பில் என் மேக்கப் மேன் மற்றும் ஹேர் டிரஸ்ஸர் பார்க்கணும் என்றால் அது அவங்க இந்த சினிமா தொழிலையே கேவலப்படுத்துற ஒரு விஷயம்.

10 கோடி சம்பளம் எதுக்கு :

அவங்க இப்படி கூறுவது சினிமாவை கேவலப்படுத்துற மாதிரி இருக்கு. ஒரு இயக்குனர் தான் படத்தின் தூண். ஆனால், என்கிட்ட வேலை செய்றவங்க தான் மானிட்டரை பார்க்கணும் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். அது மொத்த படத்தையும் அசிங்க படுத்துற மாதிரி தான் இருக்கு. நயன்தாரா இந்த மாதிரி கேட்கும் போதே இயக்குனரும் தயாரிப்பாளரும் முடியாதுன்னு சொல்லி இருக்கணும். இஷ்டம் இருந்தால் நடிங்க இல்லைன்னா போயிட்டே இருங்கன்னு சொல்லி இருக்கணும். இன்னும் சொல்லப்போனால், தான் நடித்த படத்தோட ப்ரமோஷனுக்கே வரமாட்டேன் என்று சொல்லும் நடிகைக்கு எதுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும். அதுவே கேவலம்.

-விளம்பரம்-

இயக்குனர்கள் காணாமல் போய்ட்டாங்க:

மேலும், நயன்தாராவுக்கு மார்க்கெட் இருந்தா கூட பரவாயில்லை, கடந்த பத்து வருஷத்துல நானும் ரவுடி தான், மூக்குத்தி அம்மன் போன்ற ரெண்டு இல்லனா மூணு படம் தான் அவங்க கொடுத்த ஹிட். அவங்கள வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல. நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாக நிறுத்தி படம் எடுத்த பல இயக்குனர்கள் காணாமல் போயிட்டாங்க. நயன்தாராவை வைத்து எடுத்த படம் எல்லாம் தோல்விதான். அதனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனா, நயன்தாரா தன்னைச் சுற்றி கட்டமைத்து இருக்கும் பிம்பத்தை எப்படி சினிமாகாரர்களை நம்பி படம் எடுக்குறாங்கன்னு தெரியல.

விக்னேஷ் சிவன் புலம்பியது குறித்து :

திருமணத்திற்கு பின் தான் நயன்தாரா பல பிரச்சனைகளில் சிக்குகிறார். விக்னேஷ் சிவனால் அவர் கெட்டாரா, அல்லது நயன்தாராவால் விக்னேஷ் சிவன் கெட்டாரா என்பதை பேசினால் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். ஆனால், நயன்தாரா தனுஷ் விஷயத்தில் என்ன சொன்னாலும் கேட்காமல் இருக்கிறார் என்று விக்னேஷ் சிவன் அவரது நண்பர்களிடம் புலம்பி உள்ளதாக கேள்விப்பட்டோம். அதேபோல், தனுஷ் பற்றிய கடிதத்தில், தனுஷின் அப்பா அண்ணனைப் பற்றி எல்லாம் எழுதியது விக்னேஷ் சிவன் ஆகத்தான் இருக்கும். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் தலையாட்டி பொம்மையாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று பிஸ்மி கூறியுள்ளார்.

Advertisement