அடேங்கப்பா, லாக்டவுன் கேப்பில் சிக்ஸ் பேக் வைத்த வலிமை பட வில்லன்- ப்பா, வலிமையான வில்லன் தான்.

0
1425
valimai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே தல அஜித் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் தற்போது இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாகவும் நடிக்கிறார். அதுமட்டு இல்லாமல் இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். வலிமை படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். கொரோனா லாக் டவுனால் அனைத்து படப்பிடிப்புகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா அவர்கள் இந்த இரண்டு, மூன்று மாதத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். நடிகர் கார்த்திகேயா அவர்கள் தன்னுடைய சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, லாக்டவுனால் எங்களது திட்டங்கள் மாறலாம். ஆனால், எங்களது இலக்கு மாறாது என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement