விஜய் ரசிகர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள் தான் – வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் சொன்ன விஷயம்.

0
663
booney
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக விஜய் மற்றும் அஜித் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான மாபெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதோடு இவர்களுக்கு என்று ரசிகர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே நீயா நானா? போட்டி தொடங்கியது. சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை. இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின் அஜித்-விஜய் இருவரும் தங்களுடைய ரசிகர்களை கட்டுப்படுத்தி உள்ளார்களா.

-விளம்பரம்-

தற்போது அஜீத், விஜய் இருவருமே படங்களில் மும்முரமாக நடித்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அதேபோல் தல அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் வலிமை படத்திலும் இணைந்துள்ளது.
இயக்குனர் வினோத் வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

போனி கபூர் அளித்த பேட்டி:

சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை ரிலீசுக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பிரமோஷன் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் அடுத்தடுத்து எதிர்பாராத வண்ணம் டீசர்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது,

-விளம்பரம்-

வைரலாகும் போனி கபூர் அளித்த பேட்டி:

விஜய் ரசிகர்கள் அவருக்கு மிகவும் விசுவாசமாக உள்ளார்கள். ஏன்னா, விஜய் ரசிகர்கள் அஜித்தின் வலிமை படத்தைக்கூட பாராட்டுகிறார்கள் என பேட்டி கொடுத்திருக்கிறார். இப்படி போனி கபூர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத்குமார் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வேலைகள் நிறைவடைந்த பிறகு படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் பணியாற்றியவர்கள் தான் இந்த படத்திலும் இணைவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement