விஜய் 65 அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் ‘வலிமை’ பட அப்டேட்டை மேனேஜர் மூலமாக கொடுத்த அஜித்.

0
838
Vijay
- Advertisement -

விஜய் 65 படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டை தனது மேனேஜர் மூலமாக வெளியிட்டுள்ளார் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டு இல்லாமல் இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.இப்படி படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது 65வது படத்தின் பணியை துவங்கிவிட்டார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று (டிசம்பர் 10) வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் ‘வலிமை’ பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு பாதிப்பு தரவும்.

-விளம்பரம்-
Advertisement