-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சத்தம் இல்லாமல் முடிந்த வானத்தைப்போல சீரியல் நடிகர் திருமணம்- வெளியாகியுள்ள புகைப்படம் இதோ

0
676

வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு திருமணம் நடந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் ‘வானத்தைப்போல’. இந்தத் தொடர் அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

-விளம்பரம்-

சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்திருந்தார். சின்ராசு ரோலில் தமன் நடித்திருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் நடிகை மன்யா ஆனந்த் நடித்திருந்தார். அதன் பிறகு சின்ராசு வாக நடித்து வந்த தமனும் விலக அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்திருந்தார்.

வானத்தைப்போல:

இதுபோல் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதேபோல், இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்கள் சென்றதால் டிஆர்பியிலும் முன்னிலையில் வகுத்து வந்தது. மேலும், சேனல் ப்ரைம் டைமில் அதிக ரேட்டிங் பெற்று இருந்த தொடர்களில் இதுவும் ஒன்று. அதிலும் 1000 எபிசோடுகளுக்கும் மேல் சென்று சாதனை படைத்த சீரியல்களின் பட்டியலில் வானத்தைப் போலவும் இடம்பெற்றது.

திடீரென்று முடிக்கப்பட்ட சீரியல்:

-விளம்பரம்-

வானத்தைப்போல சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் திடீரென முடிவுக்கு வந்தது. அதாவது புதிய சீரியல்களை ஒளிபரப்புவதற்காக, ரொம்ப நாளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களை முடிக்கலாம் என்று சேனல் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதனால் டிஆர்பி யில் முன்னிலையில் இருந்தாலும் புது சீரியல்களுக்காக வானத்தைப்போல சீரியலை முடித்தார்கள். தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகிய நேரத்தில் ‘மூன்று முடிச்சு’ என்னும் சீரியல் ஒளிபரப்பப்படுகிறது.

-விளம்பரம்-

தமன் திருமணம்:

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கும் போது பாசமுள்ள அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தமனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புதிதாக இணைந்துள்ள இந்த திருமண ஜோடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இவர் வானத்தைப்போல சீரியலுக்கு பின் அபியும் நானும், பூவே உனக்காக போன்ற சீரியல்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தமன் குறித்து:

நடிகர் தமன், முதல் முதலில் வெள்ளித்திரையில் தான் அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘ஆச்சாரியங்கள்’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அதற்குப் பிறகும் இவர் சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும், சேது பூமி, நேத்ரா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக வெள்ளித்திரையில் இவர் நடித்த படம் ‘பார்க்’. தற்போது மேலும் ஒரு சில படங்களில் இவர் நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news