விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் சொன்னது போல லியோ படத்தின் கதை ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகி இருக்கிறது. பார்த்திபன் (விஜய்) தனது மனைவி சத்யா (த்ரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே ஒரு சிறிய காபி கடை வைத்து நடத்தி வரும் அவர் அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இருப்பினும், அவரது மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. எதிர்பாராத விதமாக பார்த்திபனுக்கு(விஜய்க்கு) சிலருடன் சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையில் அவர் சிலரை கொலை செய்துவிடுகிறார். இதனால் பார்த்திபன்(விஜய்) இமாச்சல பிரதேசம் முழுவதும் பிரபலமாகிறார். அதன் பிறகு ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்) பார்த்திபனை கவனிக்கிறார்கள். பார்த்திபனின் செயல்கள் பழைய எதிரியான லியோ தாஸை நினைவுபடுத்துகின்றன.

Advertisement

இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபன் யார், லியோ தாஸுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தை ஆண்டனி ஏன் தேடி வருகிறார்? பார்த்திபன் இந்த அனைத்து சிரமங்களையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறாரா ? அல்லது அவரது மகிழ்ச்சியான குடும்பம் ஒரு நொடியில் பிரிந்துவிடுகிறதா? இந்த முழுமையற்ற கேள்விகளுக்கான பதில்களுடன்படம் நகர்கிறது.

என்னதான் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சமீப காலமாக எந்த பிரபலத்தை பார்த்தாலும் பத்திரிகையாளர் கேட்கும் கேள்வி ‘லியோ படம் பார்த்தீர்களா’ என்பது தான். அந்த வகையால் பாஜக எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான சீனிவாசன் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் லியோ படம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர்.

Advertisement

அதற்கு பதில் அளித்த அவர் நான் அன்று வீட்டில் இருந்ததால் படத்தின் டிரைலரை பார்த்தேன் நீங்கள் அனைவரும் படத்தை பார்த்தீர்களா எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா எனக்கு பார்ப்பதற்கு நேரமே இல்லை நேற்று இரவு 11 மணிக்கு தான் வந்தேன் தற்போது மீண்டும் காலையில் கோவிலுக்கு சென்று வந்தேன் விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்த்துவிடலாம் என் பசங்களிடம் கேட்டேன் நன்றாக இருக்கிறதா என்று நன்றாக இருக்கிறது என்றார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், படத்திற்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் அரசியல் தான் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு அரசியலையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. படம் நன்றாக இருந்தால் பார்க்க வேண்டியதுதான் என்றார். ஏற்கனவே லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது அந்த படத்தில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையானது. ஆனால், அந்த சமயத்தில் லியோ படத்தின் ட்ரைலரை தனது வீட்டில் பார்த்ததாக வானதி ஸ்ரீனிவாசன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement