அடுத்தவங்க உழைப்பை திருடறதுக்கு பேரு – வலிமை அப்டேட் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் போட்ட பதிவு. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
28737
valimai
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் ஆணுடன் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கொஞ்சிய காற்றின் மொழி சீரியல் நடிகை.

- Advertisement -

இந்த படத்தின் போஸ்டரை பல்வேரு பிரபலங்களும் பதிவிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கோவை தெற்கு தொகுதி mla வானதி ஸ்ரீநிவாசன் சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் குறித்து போட்ட பதிவு அஜித் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பா ஜ க கட்சியின் சார்பாக வானதி ஸ்ரீநிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன் இவரிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘வலிமை அப்டேட் எப்ப’ என்று கேட்டிருந்தார்.இதற்கு பதில் அளித்த வானதி ஸ்ரீநிவாசன், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பதில் அளித்ததோடு, Vanathi4KovaiSouth #Valimai #ValimaiUpdate போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வானதி ஸ்ரீநிவாஸன் வெற்றி பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ பட போஸ்டர் குறித்து பதிவிட்டு நான் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் ஒருவரின் உழைப்பிற்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவதா என்று திட்டி தீர்த்து வருகின்றனர். அடுத்தவர் உழைப்பை திருடுவது அசிங்கம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ஒரு ட்விட்டர் வாசி, த்து வெக்கமா இல்ல உங்களுக்கு. கோயம்புத்தூர்ல vaccine இல்ல, உங்க தொகுதில பல இடத்தில மழை வந்த தண்ணி தேங்கி நிக்குது இதெல்லாம் சரி பண்ண துப்பில்ல. வந்துதிங்க #valimai update னு சொல்லிக்கிட்டு. valimai update க்கும் உங்களுக்கு என்ன சம்மந்தம் என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

Advertisement