இது தான் ‘மஹான்’ படத்தில் வாணி போஜன் நடித்த காட்சி – வெளியான 7 நிமிட Deleted வீடியோ காட்சி.

0
891
vanibhojan
- Advertisement -

மகான் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விக்ரம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியான படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர். மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 123-36-1024x768.jpg

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் அழகாக காண்பித்து இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்கவைத்து இருந்தது. மேலும், இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை.

- Advertisement -

வாணி போஜன் காட்சி நீக்கம் :

அதற்கு பதிலாக படத்தின் ஆரம்பத்தில் வாணி போஜன் பெயரை குறிப்பிட்டு நன்றி மட்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து வாணி போஜன் கூறுகையில் ‘மகான் படத்தின் முதல் பாதி ஏற்கனவே விக்ரம் சாருடன் எடுத்து விட்டோம் ஆனால் சோனா கட்டுப்பாடுகளால் இரண்டாம் பாதி எங்களால் சூட்டிங் செய்ய முடியவில்லை. மேலும், அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஒரு தொடர்பில்லாமல் இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் சொன்ன காரணம் :

அதனால் கார்த்திக் சார் என்னிடம் இதுகுறித்து சொன்னார்.நான் எடிட் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளுங்கள் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்னை பொறுத்தவரை அனுபவம் தான் எனக்கு முக்கியம். இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவம். யூடியூபில் வருவது போல சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வாணி போஜன், ஏமாற்றிவிட்டார்கள் படக்குழு என்று எல்லாம் சத்தியமாக கிடையாது. கார்த்திக் சார் எனக்கு தனிப்பட்ட முறையில் கால் செய்து, வாணி இப்படி இருக்கிறது என்ன பண்ணட்டும் என்று என்னிடமும் கேட்டார்.

-விளம்பரம்-

9 நாள் வேலை செய்த வாணி போஜன் :

இந்த படத்திற்காக நான் எட்டு ஒன்பது நாள் வேலை செய்து இருக்கிறேன்.விக்ரம் சார் மாதிரி ஒரு ஸ்டாருடன் வேலை செய்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் அதேபோல பலரும் இந்த படத்தில் நான் ஏன் வரவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.நீங்கள் சொல்வது போல எனக்கு இருக்கும் ஒரு சிறிய ரசிகர் கூட்டமும் எங்கே நீங்கள் படத்தில் காணவில்லை என்று சொன்னது எனக்கு சந்தோஷம்தான் ஏனென்றால் இந்த படம் வெளியாகும் போது நம்மை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்றுதான் நினைத்தேன்.

வெளியான மஹான் Deleted காட்சி :

நான் இந்த படத்தில் நடிப்பது சில பேருக்கு தெரியலாம் சில பேருக்கு தெரிந்திருக்காது. ஆனால் படம் வெளியான பின்பு அந்த மீமை எல்லாம் எனக்கு அனுப்பினார்கள். அவர்களாக என்னை பார்க்க முடியவில்லை என்பது மட்டும் தான் எனக்கு வருத்தம்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மகான் படத்தில் இருந்து சில நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வாணி போஜன் நடித்த காட்சிகளின் வீடீயோக்களும் வெளியாகி இருக்கிறது.

Advertisement