தெய்வமகள்’ சத்யா நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் கதை என்ன தெரியுமா..?வெளிவந்த தகவல்

0
1634
- Advertisement -

ப்ரியா பவானி சங்கரைத் தொடர்ந்து சீரியல் டூ சினிமாவுக்கு வந்திருக்கிறார், வாணி போஜன். ‘தெய்வமகள்’ சத்யா. ‘N4’ என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாகும் சந்தோஷத்தில் இருந்தவரிடம் பேசினேன்.

-விளம்பரம்-

actress vani bhojan

- Advertisement -

“ ‘தெய்வமகள்’ சீரியலை என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். சீரியல் முடிவுக்கு வரப்போகுதுனு கேள்விப்பட்ட நிமிடத்துல இருந்தே ஒரே ஃபீல். வருடக் கணக்குல பழகினவங்களை விட்டுப் பிரியப்போற சோகம். ஆனா, மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷமும் இருந்திச்சு. ரொம்ப நாளா ஓடிட்டே இருந்ததுக்கு கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு! ஆறு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதே ‘தெய்வமகள்’ தொடர்தான் இந்த சினிமா வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்து ‘கிளம்பு’னு சொல்லியிருக்கு. ‘சத்யா’ கேரக்டரைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டே வந்திருக்கார், இந்தப் படத்தோட டைரக்டர் லோகேஷ்!” என்றவரிடம், சில கேள்விகளை வைத்தேன்.

“சினிமாவில் நடிக்க வீட்டுல எப்படி சம்மதம் சொன்னாங்க?”

-விளம்பரம்-

“ஆக்சுவலா, நான் மாடலிங்ல இருந்ததுனால, சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே சினிமா வாய்ப்புகள் வந்தது. புதுமுகம் வேணும்னு கேட்டு வந்தாங்க. சினிமா குறித்த ஒரு பயம் எனக்கு மட்டுமல்ல, வீட்டுல எல்லாருக்குமே இருந்ததால, கமிட் ஆகலை. இப்போ கொஞ்சம் ஃபெமிலியர் ஆகிட்டதால, பயம் போயிடுச்சோ என்னவோ! சரினு சொல்லிட்டோம். அதுபோக, இந்தப் படத்தை இயக்குகிற டைரக்டர் ஏற்கெனவே ‘மை சன் இஸ் கே’ங்கிற படத்தை இயக்கியவர். நிறைய விருதுகளைப் பெற்ற படம். அவரோட ‘N4’ கதையும், அந்தக் கதையை அவர் சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு”

vani bhojan

“அவார்டு பட டைரக்டர்னு சொல்றீங்க. விருதுப் படங்கள் தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகாதுனு ஒரு கருத்து இருக்கே?”

“ஏங்க, ‘மை சன் இஸ் கே’ கமர்ஷியல் படமா எடுத்ததுதானாம். ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே நிறைய விருதுகள் கிடைச்சிருக்கு. இந்தப் படம் கமர்ஷியல் படம்தான். சென்னை காசிமேட்டுல நடக்கிற கதை. கதை கேட்டப்போவே செம இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. கமிட் ஆகுறதுக்கு முன்னாடி சில நிபந்தனைகள் விதிச்சாங்க. கேட்குறப்போ கொஞ்சம் மிரட்சியா இருந்துச்சு. ஆனாலும் ஓ.கே சொல்லிட்டேன். இந்தப் படத்துல என்னைப் பார்க்கிறவங்க, ‘சத்யா’வா நடிச்ச பொண்ணா இது’னு கேட்பாங்க.

படத்தின் இயக்குநர் லோகேஷிடம் பேசினேன்.

” ‘தெய்வமகள்’ தொடரை என் வீட்டுல எல்லாரும் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. தமிழ்நாடு முழுக்க பரிச்சயமான ஒரு முகம் மூலமா நாம நினைச்சதை மக்களுக்குக் கடத்துறது ஈஸினு தோணுச்சு. அதனால, வாணி போஜனைப் படத்துல கமிட் செய்தேன். என்ன ஒரு ஆச்சர்யம்னா, இந்தப் படம் முழுக்க ஸ்லம் ஏரியாவைச் சுத்தி நடக்கிற கதை. அதனால ‘மேக்அப் ரொம்ப இருக்காது; கேரவன் அது இதுனு நினைச்சதெல்லாம் கிடைக்காது, ஸ்லம் மக்களோடவே பழகி, அங்கேயே தங்க வேண்டி இருக்கும்’னு வாணி போஜன்கிட்ட சொன்னேன். ‘எனக்குக் கதை பிடிச்சிருக்கு, மத்த விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’னு உடனே சரினு சொல்லிட்டாங்க.

Vani-Bhojan

அடுத்த சில நாள்கள்ல ஷூட்டிங் கிளம்பறோம்’ என்றவர், ‘நிச்சயம் எங்கள் படம் வட சென்னையின் ஸ்லம் பகுதிகளை இதுவரை தமிழ் சினிமா காட்டியது போலக் காட்டாது. இன்னைக்கு அந்தப் பகுதி மக்கள் எப்படி வாழ்றாங்கனு அப்படியே பதிவு பண்ணப் போறோம்!’ என்கிறார்.

Advertisement