சீரியலுக்கென்றே இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் நாயகியாக வந்து அசத்துபவர் நடிகை வாணி போஜன். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
சீரியலில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக நடித்து வரும் இந்த ஆசை நாயகியை பெரிய திரை சினிமாவில் பார்க்க அவரது ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கின்றனர்.
சமீபத்தில், இவரது பெரிய திரை சினிமா பற்றி பேட்டி கொடுத்துள்ளார். பெரிய திரை என்றால், எப்படியானாலும் அதில் கண்டிப்பாக விஜய் அஜித் டாபிக் இல்லாமல் இருக்காது.
அப்படி தளபதி விஜயைப் பற்றி கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலானது, நான் விஜயைப் பார்த்தால், எப்போது வாணி போஜனுடன் நடிக்க போகிறீர்கள், எனக் கேட்பேன், ஆனால் அவர் வாணி போஜன் என்றால் யார் எனக் கேட்டுவிடுவார் என நினைக்கிறேன். என கலகலவென பேசுகிறார் வாணி.
அதேபோல் அஜித்திடம் என்ன கேட்பீர்கள் எனக் கேட்டதற்கு,அவரிடம் கேட்க அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.