கோமா நிலையில் சீரியல் நடிகர் வேணு அரவிந்த் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. காரணம் இது தானாம்.

0
1457
venu
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் வேணு அரவிந்த். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
May be an image of 4 people and people smiling

சீரியல் மட்டுமல்லாது அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். கொரோனா தொற்ரில் இருந்து இவர் குணமடைந்த சில நாட்களிலேயே இவருக்கு நிமோனியா வந்துள்ளது. மேலும், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.

VAANI RANI 1000 | Actor Venu Arvind About His Experience | A Radaan  Milestone - YouTube

இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேணு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement