தர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா! வனிதா திமிர் பேச்சு.!

0
3746
tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருந்தவரை வனிதாவின் குரல் தான் அதிகம் ஒலித்துகொண்டே இருந்தது. இவர் செய்த ஆதிக்கத்தை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்று ரசிகர்கள் எண்ணி வந்த நேரத்தில் தர்ஷன் ஒரு கட்டத்தில் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டதை ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர். அவ்வளவு ஏன் கமல் கூட தர்ஷனை பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடம், பிக் பாஸ் கன்டராக்ட்டில் இப்படி தான் பேச வேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வனிதா, கமலுக்கு காண்ட்ராக்ட் இருக்கிறது, ஆனால், அவரிடம் நாம் கத்த முடியுமா?

இதையும் பாருங்க : பிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

இங்கே காண்ட்ராக்ட் என்பது முக்கியமில்லை வயதிற்கு அனுபவத்திற்கும் ஒரு மரியாதையை இருக்கிறது. அதே போல தான் எங்கள் அனைவருக்கும் ஒரே ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கமல் சாருக்கும் இருக்கும் ஒப்பந்தம் எனக்கு இருக்காது. ஆனால், கண்டிப்பாக தர்ஷனை விட எனது ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியாக கூட இருக்கலாம்.

அதற்கு முக்கிய காரணமே நான் யார் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படி நீயும் (தர்ஷன்) நானும் ஒன்று என்று சொல்லலாம். நாம் எல்லாரும் மனிதகர்கள் அவ்வளவு தான். ஆனால், அனைவருக்கும் ஒரு உயர்ரக தகுதி இருக்கிறது. கமல் சார் உன்னுடைய குரல் வீட்டில் கேட்கவில்லை என்பதற்காக வணிதாவிடம் சவுண்ட் விட்டால் மட்டும் தான் அது வெளியில் போய் சேரும் என்று தர்ஷனுக்கு தெரிந்தது.

-விளம்பரம்-

அவன் சினிமாவில் ஒரு நடிகராக வர வேண்டும் என்றால் இப்படி அவன் எதாவது செய்து கவனத்தை ஈரத்தால் தான் கவனிக்கபடுவான். ஏன்? அவன் மீராவிடம் அவன் சண்டை போட்டால் ஹைலைட் ஆகுமா. அதனால் தான் அவன் வனிதாவிடம் சண்டை போட்டான் என்று கடுமையாக கூறியுள்ளார்.

Advertisement