இதுக்கு தான் என்ன பிக் பாஸ்ல கூப்பிட்டாங்க.! வனிதா அளித்த முதல் பேட்டி.!

0
13995
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேறியது பலருக்கு சந்தோசம் தான் என்றாலும், அவர் நிகழ்ச்சியில் இல்லாமல் போனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதுவும் கொஞ்சம் ஏற்புடையதாகவே இருந்தது.

Vanitha

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறிய அடுத்த நாளே அவர்களின் பேட்டி இணையத்தில் வந்துவிடும். ஆனால், வனிதா வெளியேறி 3 நாட்கள் ஆன நிலையிலும் அவர் எந்த ஒரு பேட்டியும் அளிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வனிதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : நான் உன்கிட்ட அப்படியா பழகுறேன்.! கவினை நோண்டி எடுக்கும் சாக்க்ஷி.! 

- Advertisement -

அந்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில்,பி க்பாஸ் நிகழ்ச்சியில் என்னை அழைத்ததற்கு முதல் காரணமே நான் பல சர்ச்சைகளில் சிக்கிவந்தேன் என்பதால் இல்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கே கண்டிப்பாக கண்டன்ட் கிடைக்கும் என்று பிக்பாஸ் குழு நம்பினார்கள். சொல்லப்போனால் கடந்த இரண்டு சீசன்களாக என்னை அழைத்து வந்தார்கள். ஆனால் தற்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.

Sakshi

உண்மையில் நான் நானாகத்தான் அங்கு இருந்தேன் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. எனது உண்மையான குணமே அது தான், அதனால் தான் பல சர்ச்சைக்கு காரணம் ஆகி விட்டது. எனக்கு தனியாக ஸ்கிரிப்ட் எதுவும் தேவையில்லை என்று நினைத்ததால் தான் பிக் பாஸ்வீட்டிற்குள் என்னை அனுப்பி வைத்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு சென்ற நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை இருப்பினும் அந்த வீட்டில் என்னதான் இருக்கிறது என்பதை அனுபவிக்கத்தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன் என்று கூறிய வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த வெறும் மூன்றே நாட்களில் எப்படி காதல் வருகிறது என்பதுதான் எனக்கு தெரியவில்லை என்று அபிராமி மற்றும் சாக்க்ஷி குறித்துப் பேசத் தொடங்கினார்.

அப்போது அபிராமி குறித்துப் பேசுகையில் அவள் முதலில் கவினை காதலிப்பதாக சொன்னால். ஆனால், அவன் வேண்டாம் என்று சொன்னதும் அவன் அந்த அளவுக்கு தகுதியானவர் இல்லை என்று அவளே முடிவு செய்துவிட்டால். அதன் பின்னர் முகினிடம், அவர் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தாள். அவள், முகினை காதலிக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வெளியில் முகினுக்கு வேறு காதலி இருக்கிறார் என்பதும் தெரியும் . இதனால் நான் முகினிடம் சென்று உன்னை அபிராமி காதலன் என்று அழைக்கிறாரே இது போன்று நடந்து கொண்டால் உன் காதலி கோபித்துக்கொள்ள மாட்டாரா என்று கேட்டேன். அதற்கு முகினோ அவள் கோபித்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால் அவளிடம் எல்லாமே நான் சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன். இங்கு நடப்பது எல்லாமே நடிப்புதான் என்பது அவளுக்குத் தெரியும் என்று என்னிடமே அவன் சொன்னான்.

இதே போல சாக்ஷியிடம் நீ உண்மையாகவே கவினை காதல் செய்கிறாயா என்று கேட்டதற்கு அவர், இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று என்னிடம் கூறினாள். அதனால் அவன் நண்பன் மட்டும்தான் என்றால் அவனுக்கு எதற்காக இந்த அளவுக்கு இடம் கொடுக்கிறாய் என்று கேட்டேன். எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் நான் யாரையும் அடிக்கடி கட்டிப்பிடிப்பதில்லை. ஆனால், இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக அமர்ந்து கொண்டு படுக்கையில் ஒன்றாக இருந்து கொண்டும் கட்டி பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதனால் பிக்பாஸ் வீட்டில் வந்து இருப்பவர்கள் எல்லோருமே அவர்களது வீட்டில் நான் உள்ளே போயி நடிக்கத்தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு தான் வந்து இருக்கிறார்கள். ஆனால்,, கமல் ஒரு ப்ரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகத்திரை கிழிக்கப்படும் என்று கூறியிருந்தார். நான் கமல் சாருக்கு சவால் விடுகிறேன் இங்கு யாருடைய முகத்திரையும் கிழிக்க முடியவில்லை. சொல்லப்போனால் முதல் வாரத்தில் தான் அவர்கள் எல்லோரும் உண்மையாக நடந்து கொண்டார்கள். அதன் பின்னர் அனைவருமே ஒரு முகமூடியைஅணிந்து தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள் என்றார்.

Advertisement