தளபதி-62 பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.! ஆதாரத்துடன் புகைப்படம் உள்ளே

0
880
varalakshmi-sarathkumar

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் இளையதளபதி விஜய் கூட்டணியில் தயாராகி வரும்”விஜய் 62 ” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் சரத் குமரன் மகளும் இந்த படத்தின் இணைந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

vijay-62

விஜய் 62 படத்தின் பல்வேறு தகவல்கள் சமீப காலமாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் கதை கரு , படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செட்டின் புகைப்படங்கள் வரை வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் விஜய் ஆளும் தமிழக அரசை கூட எதிர்த்து சில காட்சிகளில் நடித்துள்ளார் என்றெல்லாம் கூட கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தானும் நடிக்க இணைந்துள்ளதாக நடிகை வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் கூட வெளியாகின அதில் ஏ ஆர் முருகதாஸ் கையில் கிலாப் போர்டை வைத்துக் கொண்டிருக்கிறார்.அதில் sceen no: 46 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி , அதில் “தளபதி 62 படத்தில் விஜயுடன் உண்டான பயணம் தொடங்கி விட்டது. தற்போதைக்கு நாங்கள் படத்தில் இருக்கும் லுக்கை வெளியிடக்கூடாது ” என்று பதிவிட்டுள்ளார்.