நடிகர் சரத்குமாரன் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் மிரட்டும் வில்லியாக நடித்து அசத்தி வருகிறார். இவர், நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கபட்டது. இருவரும் இணைந்து சண்டக்கோழி 2, மதகஜ ராஜா போன்ற படங்களில் ஒன்றாக நடித்தும் இருந்தனர்.
ஆனால், இருவரும் தங்களது காதல் குறித்து எதுவும் வெளியில் சொலாத போதும் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே வந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல்கள் தீயாக பரவி வந்தது.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தற்போது விஷால் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துவிட்டார். அதே போல விஷால் தனது நண்பர் மட்டும் தான் என்று தெரிவித்திருந்தார் வரலக்ஷ்மி.
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் நடிகை வரலக்ஷ்மியிடம் “இப்போ ஒருவரை பார்த்து ஐ லவ் யூ என்று சொல்ல வேண்டுமெனில் யாரை பார்த்து சொல்லுவீங்க?” என்று கேட்க அதற்கு வரலக்ஷ்மி “நடிகர் பிரபாஸிடம் தான் சொல்வேன்” என்று டக்குனு யோசிக்காமல் பதில் அளித்தார்.