நடிகர் சரத்குமாரன் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்,நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கபட்டது. இருவரும் இணைந்து அடிக்கடி சண்டக்கோழி இரண்டு படத்தில் இணைவரும் இணைந்து அடிக்கடி ஊர்ச்சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இருவரும் தங்களது காதல் குறித்து எதுவும் வெளியில் சொலாத போதும் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே வந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக பேச்சுகளும் தீயாக பரவி வந்தது.
சமீபத்தில் நடிகர் விஷால், வரலட்சுமியை சிறு வயது முதலே தனக்குத் தெரியும் என்றும், வரலட்சுமி தனது நெருங்கிய தோழி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் குறித்து நேரம் வரும் போது அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மியும் விஷாலுடனான உறவு குறித்து பேசியுள்ளார், அதில் நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஷால் திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியுள்ளார்.