தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாக ஏற்கனவே பிரச்சனை தொடங்கியது. பொங்கல் பண்டிகைகளில் தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் குறைவான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்தை வெளியிடுவதால் தான் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகள் அளிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சென்னை செங்கல்பட்டு நார்த் ஆர்காடு சவுத் ஆர்காடு கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வாரிசு பணத்தை வெப்சைட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிப்புகள் வெளியானது.

Advertisement

பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் எதையாவது பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.

அதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கான டிக்கெட் 4000 முதல் 5000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள் பலரும் இது எங்கள் ஒரு மாச வீட்டு வாடகை என்று கேலி செய்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நாடைபெறாததால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement
Advertisement