‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ – வெளியான வாரிசு படத்தின் முதல் பாடலின் டீசர். (என்ன ஜானி மாஸ்டர் Step மாதிரி இருக்கு)

0
957
varisu
- Advertisement -

வாரிசு படத்தின் முதல் பாடலின் டீஸர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-
Beast

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது. தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

முதல் பாடல் டீசர் :

மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த டீசர் வெளியாகி இருக்கிறது. அந்த பாடல் ‘ரஞ்சிதமே’ என்று துவங்குகிறது.

-விளம்பரம்-

வாரிசு படத்தின் வியாபாரம் :

இந்நிலையில் வாரிசு படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. படத்தின் தமிழக உரிமை, மற்ற மாநில உரிமை என 200 கோடி பேசப்பட்டிருக்கிறது. ஓடிடி உரிமை 60 கோடி, சாட்டிலைட் உரிமை 50 கோடி, இந்தி உரிமை 25 கோடி, வெளிநாட்டு உரிமை 50 கோடி, படத்தின் இசை உரிமை 10 கோடி என சுமார் 400 கோடி வரை வாரிசு படத்தின் வியாபாரம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் சம்பளம்:

அதுமட்டுமில்லாமல் படத்தில் விஜய்யின் சம்பளமே 120 கோடி என்றும், படத்தின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தம் படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தியேட்டர்கள் உரிமை தவிர மற்ற உரிமைகளிலேயே போட்ட முதலீட்டை தயாரிப்பாளர் எடுத்து விடுவார். அது மட்டுமில்லாமல் டேபிள் ஃபிராஃபிட் கிடைக்கும். அதற்கு மேல் படம் நன்றாக சென்றால் தியேட்டர்கள் வசூல் மூலம் கிடைப்பது மட்டுமே லாபம் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த கணக்கு உண்மையா? பொய்யா? என்பது விரைவில் தான் தெரிய வரும்.

Advertisement