விஜய் நடித்து இருக்கும் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
வாரிசு படம்:
இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.
முதல் பாடல் :
இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ஒன்று வெளியானது.
விஜய் பாடிய பாடல் :
ரஞ்சிதமே என்று துவங்கும் இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். பொதுவாகவே, விஜயின் படம் என்றாலே அவருடைய நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது வாரிசு படத்தின் முதல் சிங்களான ரஞ்சிதமே என்ற பாடலை பார்த்த ரசிகர்கள் பலருமே அதிருப்தி அடைந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.
நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் :
பாடல் வரிகளும் சரியில்லை, விஜயின் நடன ஸ்டெப்புகள் ஒன்று கூட நன்றாக இல்லை என்றெல்லாம் கேலிக் உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலின் நடனம் நன்றாக இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்திருந்தார். தற்போதும் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும், இந்த பாடல் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் போல் இருக்கிறது என்றும் சில கேலி செய்து வருகின்றனர்.